நாளும் கோளும்
கூடிப் பேசி
நேரத்துடன் கூட்டுச் சேர்ந்து
அவனது விழிகள் முன் நிறுத்தின
பெண்ணவளை…
அக்கணமே
அவனது
பார்வையில்
எழிலனைத்தும் கலந்துவிட்டாள்
ரதிதேவி…
உள்ளத்தை
கணைகளால் நிறைத்துவிட்டான்
மன்மதன்…
இரண்டும் இணைந்து
இரசாயன மாற்றம் அடைந்து
காதல் மலர்கள் சொரிந்தன
அவனுள்…!!!
தொடங்கிவிட்டான் காளையவன்
காதல் மலர் தொடுத்து
அம்புகள் எய்வதற்கு…!!!
பாவையவள் விழிவழியே
இதயத்தை நோக்கி!!!