குடும்பத்திற்காக சிறிது நேரம்
உணவுக்காக சிறிது நேரம்
ஓய்வுக்காக சிறிது நேரம்
வழிபாட்டுக்காக சிறிது நேரம்
தூக்கத்திற்காக தேவையான நேரம்
ஒதுக்கி
மிகுதி நேரம்
நேர் வழியில் கடின உழைப்பு
தரும்
வாழ்வில்
மகிழ்ச்சி நிம்மதி…
தலைமுறைக்கு
செல்வம் சேர்க்க
ஓடி ஓடி உழைப்பதால்
கவனிப்பார் இன்றி
வழிநடத்தல் இன்றி
தவறான வழியில் சென்று
சீரழிந்திடுவர் குழந்தைகள்…
உணவின்றி உறக்கமின்றி
உடலுக்குள் புகுந்திடும்
பல வித நோய்கள்…