“தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று சிந்திக்கிறவன் சமூக விரோதியாகிறான்.
தனக்குக் கிடைக்காதது மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும் என்று கருதுபவன் சமூக சீர்திருத்தவாதியாகிறான்.”
*****
“உழைப்பு உடலை வலிமைப்படுத்தும்.
கஷ்டங்கள் மனதை வலிமைப்படுத்தும்.”
*****
“கடுமையான வார்த்தைகளைக் கொட்டுவது பலவீனத்தின் அடையாளம்.”
*****
“இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை.”
*****
“உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது.”
*****
“நாம் வாழ்வில் செய்யும் மிகப் பெரிய சாதனை, பிறரை வேதனை செய்யாது வாழ்வதே.”
*****