“எந்த உறவிலும், அடுத்தவர் வாழ்வில் நம்முடைய இடம் எது என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டால் மட்டுமே, உறவுகள் நீடிக்கும்.”
*****
“முட்டாளிடம் எப்போது பேச வேண்டும் என தெரிந்தவன் அறிவாளி.
எப்போதுமே பேசக்கூடாது என தெரிந்தவன் புத்திசாலி.”
*****
“இறந்த காலம் என்பதை நம்மால் திருத்த முடியாது.
ஆனால் நிகழ்காலத்தை நம் விருப்பப்படி அமைத்து வாழலாம்.
அதனால், நடந்ததை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொண்டு, இனி நடப்பதை சுற்றியுள்ள மற்றவர்களுக்கு அற்புதமாக அமையும்படி ஒருவன் நடந்துகொண்டால், வாழ்வின் மேன்மையான விஷயங்களுக்கான கதவுகள் தாமாக அவனுக்குத் திறக்கும்.”
*****
“நல்ல செயலில் எப்போதும் ஈடுபடுங்கள்.
மனம் போன போக்கில் வாழக்கூடாது. சந்தோஷத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வது, கேட்பது, பேசுவது, தின்பது என்றில்லாமல் மனக் கட்டுப்பாட்டுடன் வாழுங்கள்.
ஒருவரின் மனநிறைவைப் பொறுத்தே அவரது வாழ்க்கைத்தரம் அமையும். ஆனால் ஆடம்பரத்துடன் இருப்பதையே வாழ்க்கைத்தரம் என தவறாக பலரும் நினைக்கிறார்கள்.
ஏதாவது நல்ல செயலில் எப்பொழுதும் ஈடுபடுங்கள். இதனால் தீய எண்ணம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
எண்ணம், சொல், செயல் இந்த மூன்றாலும் உயிர்களுக்கு நன்மை உண்டாக்குவதே சத்தியம். தீமையை உண்டாக்குவதெல்லாம் அசத்தியம்.
நம் உண்மையான வடிவம் ஆனந்தம் தான். ஆனால், அந்த நிலையை மறந்து மனத்தால் துக்கப்படுவதை இயல்பாக்கிக்கொண்டு சிரமப்படுகிறோம். இதைத் தவிர்க்க வேண்டும்.”
*****