எத்தனையோ பெண்களை
பார்த்தும்
பற்றாத இதயம்
அவளைப் பார்த்ததும்
பற்றிக்கொண்டதே….
இழுபட்டு
அவள் பின்னே
செல்கின்றதே…
எனக்கென பிறந்தவள்
அவள்தானோ…
இதயத்திற்கு மட்டுமே
தெரிந்த இரகசியம்
இதுவோ…!!!
இமைகள்
சிறகானதே
விழிகள்
துணையானதே…
பறந்து
பற்றி
இதயத்தில்
சிறை வைத்ததே…!!!
காதலால்
கட்டி வைத்ததே!!!