“துணிவு வந்தால் பயமும் தெரியாது, தூரமும், தொலைவும் தெரியாது.
தன்னுடைய இலக்கு மட்டும் தான் தெரியும்.”
*****
“ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை நற்குணம்,
தனக்குத் தானே உண்மையாக இருப்பது.”
*****
” நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும், உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும், நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும், உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும், உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண் வேண்டும், உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண் வேண்டும்.
உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி பாரமானது..?
நீ எவ்வளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில் நியாயம்..?
வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும் பெண் பிள்ளை பாரமாகத் தெரியாது. “
*****