என்னைவிட்டு உன்னை
பிரித்தெடுத்த நொடி வரை
வாழ்ந்த
ஒவ்வொரு நிகழ்வுகளையும்
பொறித்து வைத்திருக்கும்
உள்ளத்தை
புரட்டிப் பார்த்து
வாழ்கிறேன்…
நீ
மீண்டு வரும்வரை
பலம் துணிவு தரும்
பொறுமை நம்பிக்கை தரும்
ஊக்கம் விடாமுயற்சி தரும்
உற்சாகம் மகிழ்ச்சி தரும்
பொன்னேடு அதுவே!!!