
“ஒருநாள் ஒருத்தன்,
குயிலிடம் சொன்னான் – நீ மட்டும் கறுப்பா இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
கடலிடம் சொன்னான் – நீ மட்டும் உப்பாக இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
றோஜாவிடம் சொன்னான் – உன்னிடம் முட்கள் இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அப்போது அந்த மூன்றும் ஒன்று சேர்ந்து சொன்னது – ஏ மானிடா! உன்னிடம் மட்டும் பிறரில் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லையென்றால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.”
*****
“விட்டுக்கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
மன்னிப்பு கொடுங்கள் தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு அதிகமாகும்.”
*****
“இலவசமாக கிடைக்கும் சொற்களை பயன்படுத்தி ஒருவரை எளிதில் காயப்படுத்திவிட்டு விலை மதிக்கமுடியாத அவர்களின் அன்பை இழக்காதீர்கள்.”
*****
“வாழ்த்திப் பேச முடியாவிட்டாலும் தாழ்த்திப் பேசுவதை குறையுங்கள்.
வாழ்க்கையில் நீங்கள் உயரலாம்.”
*****
“தேவையற்ற பேச்சே உறவுகளை தொலைப்பதற்கு காரணம்.
பேச்சை அடக்கினால் உறவுகள் நிலைக்கும்.”
*****