
“ஐந்து வினாடிப் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால், எப்போதும் புன்னகை, வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும். வாழ்க்கையை அழகுடன் வாழுங்கள்.”
*****
“சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்குரிய முழு ரகசியம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் மலர்ச்சி உண்டாகும்.”
*****
“சிங்கத்திடம் வேலைக்குச் சேர்ந்தது அணில்.
சிங்கம் வேலை வாங்கிக்கொண்டே இருந்தது. சம்பளம்? “என்ன அவசரம்! உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும். அவசியம் தருகிறேன்” என்றது சிங்கம்.
பல ஆண்டுகள் கழிந்தன. முதுமையடைந்த அணில் ஓய்வு பெற நினைத்தது.
கணக்கைத் தீர்க்குமாறு கேட்டது. விடைபெறும் நாளன்று ஒரு வண்டி நிறைய கொட்டைகளையும் பருப்புகளையும் கொட்டிக் கொடுத்தது சிங்கம்.
முதிர்ந்துவிட்ட அணிலுக்கோ கடித்துச் சாப்பிடப் பல்லில்லை. எதிர்த்துப் பேசவும் சொல்லில்லை.
உழைப்பின் பயனை உடனே பெறுவதே உயர்வு.”
*****
“மன்னனின் வேண்டுகோளை ஏற்று அரண்மனைக்கு வந்து துறவி, “மன்னா.. உன் விருப்பபடியே சிலநாட்கள் உன் விடுதியில் தங்குறேன்..!” என்றார். திகைத்து போன மன்னன் கேட்டான். “ஏன்.. என் அரண்மனையை பார்த்து விடுதி என்கிறீர்கள்..?” என்றான். துறவி சிரித்து விட்டு, “மன்னா உனக்கு முன் பாட்டன்.., தாத்தா.., அப்பா.. இதில் இருந்தார்கள். இப்போ.. நீ.., அதற்கு பிறகு உன் மகன்.., பேரன்.. என்று காத்து இருக்கிறார்கள். இப்படி சிலகாலம் ஒவ்வொருதரும் தங்கி போகும் இடம் விடுதிதானே..! இன்னுமா நீ இங்கு நிரந்தரம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறாய்..?” என்றார்.
உண்மைக்கென்று தனி அறிகுறிகள் இல்லை. அதை தர்க்கங்களாளோ முழக்கங்களாளோ நிறுவமுடியாது. உண்மையில் உண்மை வேறெங்கிலும் இல்லை. அது உனக்குள்ளேயே இருக்கிறது.”
*****