
காத்திருந்து பார்த்திருந்து
வறட்சியானது
மண் மட்டுமல்ல
விழிகளும் தான்…
மண் தோண்டி விண் தொட்ட
கட்டிடங்கள்
தடுத்தனவோ…
காடழித்து உருவான
குடியேற்றங்கள்
மறித்தனவோ…
தலைவிரித்தாடும்
பாவச் செயல்கள் பார்த்து
வெறுத்தனையோ…
தடுத்தவற்றை தகர்த்தெறிந்து
வந்திடு…
மண்ணோடு
நல்ல உள்ளங்கள் குளிர்ந்திட
பொழிந்திடு…