
“ஒரு பூ மலரும்போது சுற்றிலும் எப்படி நறுமணம் வீசுகிறதோ, அப்படித்தான் தியானமும்.
அது மலர்ந்துவிட்டால் சுற்றியுள்ள அனைவருக்கும் நறுமணம் வீசும்.”
*****
“சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை”
*****
“நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.”
*****
“வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால்,
அவைதான் வாழ்வை இனிமையாக மாற்றும்.”
*****
“துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.”
*****
“உன்னால் முடிந்தவரை உன் பணியினை இன்று நன்றாகச் செய்.
நாளை அதனிலும் நன்றாகச் செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்.”
*****
“நாகரீகமில்லா காலத்தில் நம்மை நல்வழிப்படுத்தும் நோக்கில் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பண்பாடுமிக்க கட்டமைப்பே மதங்களாகும். எல்லா மதமும் போதிப்பது அன்பையும் நேர்மையையுமே ஆகும்.”
*****
“வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர்
…நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார்…. உரமிட்டார்…. நீர் பாய்ச்சினார்….
செடிகள் பெரிதாக வளரவில்லை.
பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.
அதே தண்ணீர். அதே உரம். அதே இடம்.
இது எப்படி சாத்தியம்?
கிழவர் சொன்னார்: “அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்…”
அப்பொழுது தான் உரிமையாளருக்கு புரிந்தது…
முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்… முழு பயன் தராது…என்று.”
*****