
மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த நிலப்பகுதியை காடு என்கின்றோம்.
காட்டில் மரங்களுடன் விலங்குகளும் வாழ்கின்றன.
ஒரு நாட்டுக்கு காடு மிகவும் இன்றியமையாததாகும்.
காடுகள் பூமியின் வெப்பத்தைக் குறைப்பதற்கும், உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கும் மழை பொழியச் செய்கின்றன.
வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துகின்றன.
மண்ணரிப்பைத் தடுக்கின்றன.
காடுகள் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனைத் தருகின்றன.
பல நோய்களுக்கு மருந்தாகும் அரியவகை மூலிகைகளைக் கொண்டுள்ளன.
நீர் வளத்தைப் பாதுகாத்து சுத்தமான காற்றைத் தரும் காட்டு வளம் மனிதனின் பேராசையால் அழிந்துகொண்டு வருகிறது.
அதனால் மழைவீழ்ச்சி குறைவடைந்து பூமியில் வெப்பம் அதிகரிக்கின்றது.
நன்னீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது.
காட்டு வளங்களைப் பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமையாகும்.
காட்டு வளங்களை அழிப்பது தற்கொலைக்குச் சமமாகும் என்ற விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்துவது அவசியமாகும்.
தேவைக்கு மேலதிகமாக மரங்களை வெட்டுதல் கூடாது.
மரங்களை வெட்டும்போது பதிலாக பல மரக்கன்றுகளை நடுதல் வேண்டும்.
மரம் வளர்ப்போம், காட்டு வளத்தைப் பாதுகாத்து பயன் பெறுவோம்.
*****