பட்டப்பகலில்
இருவரும் ஒரு குடையில்
அணைத்தபடி நெருக்கமாக…
ஐயோ
அப்படி பார்க்காதீர்கள்
என் மனைவிதான்…
பட்டப்பகலில் நெருங்கினால்…
முன்பு
யாராவது பார்க்கப் போகிறார்கள்…
இப்போ
குழந்தைகள் பார்க்கிறார்கள்…
இனிமேல்
வயசாகிவிட்டது வெட்கமாயில்லை…
மழையே
உனக்கு கோடானு கோடி நன்றி!!!