ஊர் விட்டு ஊர் வந்தது ஏன்!
கல்வி கற்க வந்தாயா
சமுதாயத்தை சீரழிக்க வந்தாயா…
காலம் காலமாக
பண்போடும் மரியாதையோடும்
வாழ்கின்றது எமது சமூகம்…
கல்வியே சிந்தனையாக
சாதனைகள் பல செய்கின்றனர்…
பொறுக்கவில்லையா உனக்கு…
சிகரெட் மது மாது போதை
வகை வகையான ஆயுதங்களுடன் வந்துவிட்டாயா
சீரழிப்பதற்கு…
நடக்காது உனது எண்ணம்…
மாற்றம் நடக்கலாம்
அது
நீ திருந்துவதாகத்தான் இருக்கும்!!!