என்னுள்ளே உயிர்த்து
மடியினிலே உறங்கி
தோள்களிலே ஏறி
மயக்கினாய் கண்ணா...
தவழ்ந்து திரிந்து
தளிர் நடை பயின்று
ஓட்டமாய் ஓடி
வியக்க வைத்தாய் கண்ணா…
நீ செய்த குறும்புகளால்
நான் உன்னைத் துரத்த
நீ ஓடி ஒளிந்து
நோக வைத்தாய் கண்ணா…
உன்னோடு சேர்ந்து
உன் குறும்புகளும் வளர்ந்தனவா
உன்னைத் தேடித் தேடி
உருகுகிறேன் கண்ணா…
சிறையிருக்கும் இடத்தை விட்டு
சீக்கிரமே வெளியேறி
சட்டென்று தோன்றி
சோகத்தைத் தீர்த்துவிடு கண்ணா…