சகோதரிகளே இதோ மேலும் சில ஆலோசனைகள்,
* நீங்கள் புகுந்தவீட்டிற்கு செல்வதற்கு முன் அங்கு எத்தனையோ தேவைகள், பிரச்சனைகள் இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் புதிதாக வரும் உங்களிடம் உடனடியாக சொல்லத் தயங்குவார்கள். எனவே உங்கள் புகுந்தவீட்டு உறவுகள் உங்கள் கணவருடன் தனிமையில் கதைக்கும்போது உள்ளே நுழையாதீர்கள். விபரங்களை அறிய முற்படவேண்டாம். சகஜமாக இருங்கள். நாளடைவில் உங்கள் மேல் நம்பிக்கை ஏற்படும்போது நிச்சயமாக உங்கள் துணையை, உதவியை நாடுவார்கள். பொறுமையாக இருக்க வேண்டும்.
* வெளியில் செல்லும்போது உங்களுடன் வருபவர்களுக்குப் போட்டியாக அதிக அலங்காரம் செய்யாதீர்கள். மாமியாரிடமே எப்படியான உடை அணிவது என்று கேட்பதில் தப்பில்லை. உங்கள் மேல் அன்பும் நம்பிக்கையும் ஏற்படும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடுகள். பிறகு அவர்களே உங்கள் விருப்பப்படி விட்டுவிடுவார்கள்.
* உங்கள் தகுதிகளைப் பற்றி பெருமை பேசாதீர்கள். செயல்களில் காட்டுங்கள்.
* மறந்தும் யாரையும் பிறந்தவீட்டாருடன் ஒப்பிட்டுக் கதைக்காதீர்கள். பிறந்தவீட்டு பெருமைகளையும் அள்ளி வீசாதீர்கள். தன்னடக்கம் மிகவும் முக்கியம்.
* வீட்டுச் செலவுக்கு கொடுக்கும் பணத்தை கணவருடன் ஆலோசனை செய்து அவர் மூலமாகவே கொடுங்கள்.
*உங்கள் சிநேகிதர்களின் வீட்டுக்குச் செல்வதானால் தனியே செல்லாதீர்கள். கணவருடன் செல்லுங்கள். புகுந்தவீடினரின் நம்பிக்கையைப் பெற்றதும் கணவரின் அனுமதியுடன் நீங்கள் தேவையான இடங்களுக்குச் செல்லலாம்.
*கைபேசியில் அரட்டை அடிக்கும் பழக்கம் இருந்தால். வெகுவாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.