தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
March 1, 2022 by Gowry Mohan

சுற்றுசூழல் பாதுகாப்புக்கு தனிமனிதன் மற்றும் சமுதாயம் செய்ய வேண்டியது என்ன? அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

தனிமனிதன் மற்றும் சமுதாயம்:

* சுத்தம் சுகம் தரும் என்ற அடிப்படை அறிவுக்கேற்ப குப்பை, கழிவுகளை அதற்குரிய இடங்களில் போடுதல் – இதை பார்த்து பிள்ளைகளும் இயல்பாக பழகிவிடுவார்கள். இதையே வீட்டுக்கு வெளியே, பாதை, தெருவில் கடைப்பிடித்தல்.
* பாதை, தெருவில் எச்சில் துப்புவதையும் நிறுத்த வேண்டும்.

* செல்லப் பிராணிகளை/வளர்ப்புப் பிராணிகளை தங்கள் எல்லைக்குள் வளர்த்து முறையாக பேணவேண்டும்.
* பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் பாவிப்பதை இயலுமானவரை தவிர்க்க வேண்டும்.
* வீட்டிலுள்ள அனைவரும் தனித்தனி வாகனங்கள் பாவிப்பதை தவிர்க்க வேண்டும்.
* முற்றத்தில் இடவசதிக்கேற்ப மரங்கள், செடி கொடிகள் வளர்த்தல்.
* அனாவசியமாக மரங்களை வெட்டுவதை தவிர்த்தல்.
* மரங்களை வெட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பதிலாக மரக்கன்றுகளை நடுதல்.
* புகைப்பிடிப்பதால் அவருக்கு மட்டுமன்றி அந்த புகையை சுவாசிப்பவருக்கும் கேடு என்பதை புரியவைத்து தடுத்தல்.
* மழை நீர், கழிவு நீர் தேங்கி நிற்காவண்ணம் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துதல்.
* நீரை அனாவசியமாக ஓடவிடாது தேவைக்கேற்ப சிக்கனமாக பாவித்தல்.
* அத்தியாவசியமான மின் உபகரணங்களை மட்டும் அளவோடு பாவித்தல். உதாரணமாக சிலர் நீரை கொதிக்க வைத்துவிட்டு கதைத்துக்கொண்டு இருப்பார்கள். நீர் கொதித்து வழிந்து வற்றிப்போகும். இதனால் மின், நீர் வீணாகப்போகிறது.
Rechargeable Batteries பாவிக்கலாம். Microwave Oven தவிர்க்கலாம்.
* இலகு உணவு வகைகளைத் தவிர்த்தல். இதனால் பிளாஸ்டிக் உறைகளை தவிர்ப்பதுடன் நோய்களையும் தவிர்க்கலாம். சமையல் பொருட்களை வாங்கி வீட்டில் சமைத்து உண்பதால் கழிவுகள் மரங்களுக்கு உரமாவதுடன் நோயும் எங்களை அணுகாது.
* ஒவ்வொரு ஊரிலும் ஆர்வமுள்ளோர் குழுக்களாக பிரித்து சுழற்சி முறையில் மாதம் ஒருமுறை சிரமதானம் செய்தல், கூட்டம் கூடி சுத்தம் சுகாதாரம் சம்பந்தமாக ஆலோசனை கூறுதல், சந்தேகங்களை போக்குதல்.

அரசாங்கம்:

* கழிவுகள் குப்பைகளை தேங்கவைக்காது ஒழுங்காக அகற்றுதல்.
* லஞ்சம் வாங்குவோருக்கு கடும் தண்டனை வழங்குதல் – வேலை நீக்கம்.
இதனாலேயே முறையற்ற கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுகின்றன. அப்பாவி மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய பல வேலைகளில் லஞ்சம் வாங்குவோர் ஈடுபடுகின்றனர்.
* வளர்ப்பு பிராணிகள் தெருக்களில் நடமாடுவதை தடுத்தல்.
* புகை கக்கும் வாகனங்களை பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுத்தல்.
* சிகரெட் வகைகளுக்கு தடை விதித்தல்.
* வாகன பாவனையை குறைக்கும் விதமாக விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்தல்.
* பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை, இறக்குமதியை குறைத்தல்.
* பாதையில்/தெருவில் கழிவு நீர்/மழை நீர் தேங்கி நிற்காவண்ணம் காலத்திற்கு காலம் பாதையை சீரமைத்தல்.
* பயன்தரு மரக் கன்றுகளை இலவசமாக வழங்குதல்.

Posted in கட்டுரைகள். RSS 2.0 feed.
« ஓடோடி வாரும் ஐயா!
அம்மா! »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved