காலை நேர பரபரப்பு
சமையலறையே கதியாக
இடையிடையே
குளியலறை அழைப்புக்கள்…
சாப்பாட்டறை கூவல்கள்…
ஏச்சும் பேச்சும்
மனதை வாட்ட…
கோபப் பார்வைகள்
இதயத்தை பிழிய…
வேலைப்பளு
உடலை வதைக்க…
செவிகளில் தேனாகப் பாய்ந்து
யாவையுமே துடைத்தெறிந்தது
படுக்கையறையிலிருந்து
மழழையின்
அம்மா என்ற அழைப்பு…!!!