செந்தாமரை மலர்களிலே உதித்தாய் கந்தா!
கார்த்திகைப் பெண்கள் மடியினிலே தவழ்ந்தாய் கந்தா!
உன் பெயர் சொல்லும் வேளையிலே முருகா! முருகா!
நாவில் தேனூறி இனிக்குதையா முருகா! முருகா!
துயர் வரும் வேளைகளில் வேலா! வேலா!
நாவில் உன் பெயர் வந்து தவழுதையா வேலா! வேலா!
அழைத்தவுடன் வந்திடும் குமரா! குமரா!
துன்பங்களைத் தூசாக மாற்றிடுவாய் குமரா! குமரா!
உன் திருப்பாதங்களை சரணடைந்தோம் கார்த்திகேயா!
எங்கள் எல்லோரையும் காத்திடுவாய் கலியுகவரதா!
காத்திடுவாய்
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.