விசாகத்தில் அவதரித்த விசாகனே!
வெற்றி தரும் வேல் ஏந்திய வேலனே!
குன்றுதோறும் குடியிருக்கும் குமரனே!
மயில் வாகனனே! சேவல் கொடியோனே!
உள்ளம் கலங்கும் வேளைதனில்
உடன் அழைப்பது உன்னையே…
அமைதி தரும் நின் திருநாமங்கள்
உச்சரிக்கும் நொடிப்பொழுதில்
நிம்மதி வந்து சேருதையா…
இனிமை வந்து சூழுதையா…
இனிமை தருகின்றாய்
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.