கதிரவன் வந்துவிட்டான்…
புதிய நாளொன்றை
உயிர்களுக்கு பரிசளிக்க
வந்துவிட்டான்…
பூமகளின் இருள்போக்க
ஆயிரம் ஆயிரம் தீபம் ஏந்தி
வந்துவிட்டான்…
இராப்பொழுதை ஒளியேற்ற
மின்சாரம் கொண்டு
வந்துவிட்டான்…
புள்ளினங்கள் பசியாற
மொட்டுக்களின் முடிச்சவிழ்க்க
வந்துவிட்டான்…
பிரபஞ்சத்தின் அரசன்
வந்துவிட்டான்…