வாழ்கையிடம்
அமைதி வேண்டினேன்…
அன்பை கொண்டுவா என்றது…
நிம்மதி வேண்டினேன்…
அன்பு வேண்டும் என்றது…
மகிழ்ச்சி வேண்டினேன்…
அன்பை தா என்றது…
ஆரோக்கியம் வேண்டினேன்…
அன்புதான் ஒரே வழி என்றது…
தேடினேன் தேடினேன்
அன்பை…
இறுதியில்
கண்டுகொண்டேன்…
சிறை வைத்திருந்தன
பொறாமையும் பேராசையும்…
இரண்டையும் களைந்தெறிந்தபோது
கேட்டதை தந்தது
வாழ்க்கை!!!