அன்றாடம் நடக்கும் வீதி விபத்துக்களுக்கு இரு பகுதியினரின் ஒழுங்கற்ற முறைகளே காரணங்களாகும் என்பது எனது கருத்து.
பொதுமக்கள்
– நேரத்தை திட்டமிடாது அவசரமாக வேகமாக செல்வது.
– நீயா நானா முந்துவது என்ற போட்டி மனப்பான்மை.
– சிறிய தூரத்துக்கும் வாகனத்தில் செல்வது.
– கௌரவம் என்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனி
வாகனம் பயன்படுத்துவது.
– கை பேசியில் கதைத்துக்கொண்டு,
போதையுடன்,
மன சஞ்சலத்துடன்
வாகனம் செலுத்துவது.
– இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து பகலில்,
பகலில் ஓய்வெடுக்காது இரவில்,
தூக்கக் கலக்கத்துடன் வாகனம் செலுத்துவது.
– வாகனம் செலுத்துவதற்குரிய தகுதிகளை;
கண் பார்வை,
காது கேட்டல்,
உயர் இரத்த அழுத்தம்,
வலிப்பு போன்றவை;
அலட்சியம் செய்து லஞ்சம் செலுத்தி அனுமதிப்பத்திரம் பெறுவது.
– போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்தல்.
வேகம் குறைக்கவேண்டிய இடங்கள்,
தலைக்கவசம் அணிதல்; போன்றவை.
– வாகனத்தை பாவிக்குமுன் சரிபார்க்காது எடுப்பது.
– அளவுக்குமீறிய பயணிகளை ஏற்றிச் செல்லல்.
– பாதசாரிகள் சரியான பக்கத்தில் செல்லாமை; சரியான இடத்தில்
பாதையை கடக்காமை.
– கூட்டமாக கதைத்துக்கொண்டு பாதையை மறைத்துச் செல்லல்.
– துவிச்சக்கர வண்டியில் செல்வோர் கதைத்துக்கொண்டு அருகருகே
பயணித்தல்.
அரசாங்கம்
– வீதி சீரில்லாமை.
– ஒருவழிப்பாதை, இருவழிப்பாதைகளை பொருத்தமான இடங்களில் நடைமுறைப் படுத்தாமை.
– உத்தியோக தேவைக்குரிய வாகனங்களை சொந்த தேவைகளுக்கு
பயன்படுத்துவதை கண்டுகொள்ளாமை.
– உத்தியோக தேவைக்கு ஒருவர் செல்வதற்கும் பெரிய வாகனம்
பயன்படுத்துவது.
– லஞ்ச ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்காமை.
லஞ்சம் பெற்று;
ஓட்டுனருக்கும் வாகனத்திற்கும் அனுமதிப்பத்திரம் வழங்குவது,
சாலை விதிகளை மீறுவோரை பிடித்து விட்டுவிடுவது,
குறைபாடுகள் உள்ள வாகனங்களை பிடித்து விட்டுவிடுவது –
கண்ணாடி, signal light இல்லாமை; புகை கக்குவது; சத்தம் எழுப்புவது…
– வாகனங்களுக்கு ஏற்ற வகையில் பயணிகளின் எண்ணிக்கையை
கட்டுப்படுத்தாமை.
– முக்கியமான சந்திகளில் கமெராக்கள் வைத்து கண்காணிக்காமை.
எனவே அரசாங்கத்தினதும் பொதுமக்களினதும் அலட்சியம் மட்டுமல்ல லஞ்ச ஊழலுமே அதிகமான வீதி விபத்துக்களுக்கு காரணங்களாகும்.