கரைந்து மறைந்து
சோகம் கொள்கிறாய்
சோகத்திலும்
அழகு சிந்துகிறதே…
துன்பம் மறந்துன்னை
ரசிக்கத் தூண்டுகிறதே…
உன்னை வாட்டும் காதலன் யாரோ
சொல்வாயா வெண்ணிலாவே!!!
பெருகி நிறைந்து
இன்பம் கொள்கிறாய்
இன்பத்தில்
எழில் மிளிர்கிறதே
கைகள் கோர்த்து
பாடிஆடத் தோன்றுகிறதே…
உன்னை ஆளும் மன்னவன் யாரோ
சொல்வாயா வெண்ணிலாவே!!!
திரையினில் மறைந்து
நாணம் கொள்கிறாய்
நாணத்திலோ
பேரழகு ஒளிர்கிறதே
என் நாயகன் நினைவும்
சிந்தையில் வருகிறதே…
உன் நாணத்தின் நாயகன் யாரோ
சொல்வாயா வெண்ணிலாவே!!!