ராஜாத்தி என் கண்மணியே!
அம்மா சொல்வதைக் கேளம்மா
எங்கள் வீட்டு லக்ஷ்மியே!
நல்லதைத்தான் சொல்வேன் கண்ணே!
கண்டவுடன் காதல்
பார்த்துக் கதைத்துக் காதல்
முகநூலில் காதல்
ஏமாற்றும் கவனம் கண்ணே!
காலம் மிகவும் கெட்டுப் போச்சு
ஒருவரையும் நம்பாதே
மானே தேனே என்று சொல்வான்
அலுத்தவுடன் மறைந்திடுவான்
காதல் என்று சொல்லிக்கொண்டு
கண்ட இடமும் திரியாதே
உங்களுக்குள் கதைத்துப் பேசி
முடிவுகளை எடுக்காதே
ஆசை காட்டி நம்ப வைத்து
நடுத்தெருவில் விட்டிடுவான்
உண்மையான அன்பிருந்தால்
வீட்டில் வந்து பேசச் சொல்லு
விசாரித்துப் பார்த்திடுவோம்
உண்மைகளை அறிந்திடுவோம்
நல்லவரென்று அறிந்துவிட்டால்
முறையாகப் பேசி நாங்கள்
திருமணத்தை நடத்திடுவோம்
பொறுமையாக இரு கண்ணே!