பெண்களுக்கு பெற்றோரின்/கணவனின் ஆதரவும் ஊக்கமும் இருந்துவிட்டால் மிகுதி எல்லாம் (பாதுகாப்பு, உறுதி, துணிவு, …) தானாகவே அவளுக்கு வந்துவிடும். அதனால் அவள் உற்சாகத்துடன் தன் குடும்பத்தை சரியான முறையில் பராமரித்து தனது இலக்கை சுலபமாக அடைவதுடன் குடும்பத்தை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றிடுவாள்.
பெண்களுக்கு புதிது புதிதாக இன்னல்கள் உருவெடுக்கும் இந்த சமுதாயத்தில் பெற்றோரினது/கணவனது ஆதரவு இல்லாமல் அவளால் சாதனைகள் புரிவது மிக மிக கடினமாகும். அவர்களது துணை அவளது அச்சத்தை அழித்து துணிவையும், சஞ்சலத்தை அழித்து மன உறுதியையும் தந்து, இலக்கை அடைய வழி சமைத்து மகிழ்வான வாழ்வைக் கொடுப்பது நிச்சயம்.
அன்பை மட்டுமே பொழியத்தெரிந்த பெண்களை போகப் பொருளாக பார்க்காது, கனவுகளை சிதைத்து அடிமையாக்காது, உடல் உபாதைகளை உணர்ந்து உதவிசெய்ய முடியாவிடினும் துன்புறுத்தாது இருந்தால் அவளால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.