தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact

எண்ணக்குவியல்கள்

Archives

June 9, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு8 எ2

குவியல் 8                                                                                                                      எண்ணம் 2

கல்வித்துறை

மனிதன் வசதியாக, ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான காரணிகளுள் கல்வி அறிவு மிகவும் முக்கியமானது. பொருள் ஈட்டுவதற்கும் அதனை சரியான முறையில் செலவு செய்வதற்கும், ஈட்டிய பொருளை பாதுகாப்பதற்கும் கல்வி அறிவு பயன்படுகிறது. ஒரு மனிதனின் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து உலகிற்கு தெரியப்படுத்த கல்வி அறிவு துணை புரிகிறது. மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நிர்ணயிக்கவும் அதை நோக்கி பயணம் செய்யவும் வெற்றியடையவும் கல்வி வழிகாட்டுகிறது. ஆராய்ச்சிகளுக்கும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் கல்வி துணை நிற்கிறது.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

April 30, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு8 எ1

குவியல் 8

நாட்டையும் நாட்டு மக்களையும் மேம்படுத்தும் நோக்கிலும்; சகல விதங்களிலும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும்; நாட்டு வளங்களும் உயிரினங்களும் அழியாதிருக்க  உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கும்; சமயம், கலை, கலாச்சாரத்தையும் சூழலையும் பேணுவதற்கும் ஒரு நாட்டில் பல துறைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மருத்துவம், கல்வி, விசவாயம், நீதி, நிதி, பொறியியல், கட்டுமானம், பாதுகாப்பு, வியாபாரம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, போக்குவரத்து, அரசியல், சுற்றாடல், சமயம், கலாச்சாரம், சுற்றுலா, பொழுதுபோக்கு எனப் பல துறைகள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் வேறுபாடின்றி மக்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிச் சென்று பல சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு துறையிலும் நேரடியாக தொழில்புரிவோரும் மறைமுகமாக தொழில்புரிவோரும் கடமையாற்றுகின்றனர். உதாரணமாக மருத்துவத் துறையில் மருத்துவர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தாதியர், மருந்தாளர்கள் போன்றோர் நேரடி தொடர்புடையவர்கள். மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகள் விற்பனை நிலையங்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் போன்றவை மறைமுக தொடர்புடையவை ஆகும். உயர் பட்டப்படிப்புகளையும் சிறப்புப்பட்டங்களையும் பயிற்சிகளையும் பெற்ற துறைசார் நிபுணர்கள் (Subject Matter Specialist – SMS) ஒவ்வொரு துறையிலும் கடமையாற்றுகின்றனர். இவர்கள் காலத்திற்குக் காலம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இவற்றில் சில துறைகள் சேவை மனப்பான்மை உடையவை ஆகும். இத்துறைகளில் சில துறைகளைத் தெரிவுசெய்து, அவற்றைப்பற்றிய எனது எண்ணங்களை இங்கு பகிர்கிறேன்.

குவியல் 8                                                                                                                      எண்ணம் 1

மருத்துவத்துறை

எமக்குத் தெரிந்தளவில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், யுனானி மருத்துவம் என மருத்துவக் கல்வி பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகின்றன. மருத்துவம் என்பது பல்வேறு பதவிகளைக் கொண்ட துறையாகும். இத்துறையில் மருத்துவர், பேராசிரியர், உடற்பயிற்சி/உடலியக்க மருத்துவர் (Physiotherapist), ஊடுகதிரியலாளர்கள் (x-ray), தாதியர் (Nurse), மருந்தாளர் (Pharmacist), மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் (Medical Laboratory Technicians}, மருத்துவச்சி (​Midwife) மருத்துவப் பணியாளர் (Attendant) எனப் பலர் கடமையாற்றுகின்றனர். இவர்களில் சிலர் தங்கள் வேலை தொடர்பான சிறப்புப் படிப்புகளையும் பயிற்சிகளையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்று துறைசார் நிபுணர்களாகத் திகழ்கின்றனர்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

March 19, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ6

குவியல் 7                                                                                                                       எண்ணம் 6

வாக்கு மீறல்

எதற்காவது நாம் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் அதை மீறுதல் கூடாது. அவர் பெரியவராக இருந்தாலும் சிறு பிள்ளையாக இருந்தாலும் அச்செயல் அவர்கள் மனதை நோகச் செய்துவிடும். எம்மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவோம். வாக்குறுதி கொடுக்குமுன் அதை செயற்படுத்த முடியுமா எனச் சிந்தித்துப் பார்த்தல் அவசியமாகும். எம்மால் முடியாத விஷயங்களுக்கு வாக்குக் கொடுக்கக்  கூடாது. அவசிய தேவைக்காக சிந்தித்துப் பாராது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வாக்குக் கொடுத்து காரியத்தை முடிப்பது பெரும் தவறான செயலாகும். சிலவேளைகளில் அந்த வாக்கை நிறைவேற்றமுடியாது போக வாய்ப்புண்டு. இது அடுத்தவரை ஏமாற்றும் செயலாகும்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

March 6, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ5

குவியல் 7                                                                                                                             எண்ணம் 5

சோம்பேறித்தனம்

காலத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அது தன்பாட்டில் போய்க்கொண்டே இருக்கும். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நாம்தான் அதன் பின்னே ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அதற்கு சுறுசுறுப்பும் சுயவிருப்பமும் மிக மிக அவசியமாகும். ஒருவரை அசையவிடாது இழுத்து வைத்திருக்கும் காரணிகளில் ஒன்று சோம்பேறித்தனமாகும். வாழ்க்கையில் பின்தங்கி நிற்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் சோம்பேறித்தனமானது முன்னேற்றப் பாதையில் காணப்படும் தடைக்கற்களில் ஒன்று எனவும் கொள்ளலாம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

February 21, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ4

குவியல் 7                                                                                                                    எண்ணம் 4

பிறர் துன்பம் கண்டு மகிழ்தல்

​பிறரை துன்பப்படுத்தி மகிழ்வதும் பிறரது துன்பத்தைப் பார்த்து மகிழ்வதும் ஒருவித மனநோய் ஆகும். இவர்களை ஆங்கிலத்தில் sadists எனக் கூறுவர். அந்த நோயை தாங்களே அனுபவித்தோ அல்லது உணர்ந்தோதான் குணப்படுத்த முடியும். ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்ற முதுமொழி கூறுவது போல நாம் பிறருக்குச் செய்வது சுவரில் அடித்த பந்துபோல திரும்பி எம்மை வந்தடையும். நல்லது செய்தாலோ நினைத்தாலோ எமக்கும் நல்லதே நடக்கும். கெட்டது நினைத்தாலோ செய்தாலோ அது திரும்பி வந்து எம்மைத் தாக்கும்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

February 10, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ3

குவியல் 7                                                                                                                   எண்ணம் 3

சுயநலம்

சுயநலம் என்பது தன்னை மட்டுமே கருத்திற்கொண்டு செயல்களைப் புரிவதும் சிந்திப்பதும்  பேசுவதுமாகும். மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருத்தல் முக்கியம் என்ற மனநிலையில் செயற்படுவது, உணவு, உடை, பொருட்கள் என்பவற்றை தானே முதலில் தெரிவுசெய்வது, அடுத்தவர்களின் கஷ்டங்களை உணர்வுகளை தெரிந்து கொண்டும் அவர்களைக் கொண்டு வேலை செய்விப்பது, தனது தேவைகளை திருப்தியாகப் பூர்த்தி செய்து மற்றவர்களின் தேவைகளைப்பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது என்பவை சுயநலமாக நடத்தல் ஆகும்.  ஒருவரது சுயநலம் மற்றவர்களைப் பாதிக்கும் வண்ணம் இருப்பது மிகவும் தவறாகும். பெருமைக்காகவும் புகழுக்காகவும்  சேவை  செய்பவர்களும் சுயநலவாதிகளே.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

January 24, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ2

குவியல் 7                                                                                                                              எண்ணம் 2

சந்தேகம்

சந்தேகம் என்பது புற்றுநோயைப் போன்றது. புற்றுநோய் எவ்வாறு உடலில் பரவி உடலை அரிக்கிறதோ அதேபோல் சந்தேகம் எனும் நோய் மனதில் வேகமாகப் பரவி  மனதை அரித்து நிம்மதியை அழித்துவிடும். எனவே சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால் அதனை ஆராய்ந்து பார்த்தோ, மனம்விட்டுக் கதைத்தோ அல்லது தீர விசாரித்தோ நீக்கிவிடுவதே நல்வாழ்வுக்கு உகந்ததாகும்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

January 6, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ1

குவியல் 7

ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது எண்ணங்கள் போலவே அமையும் என்பதை பல கட்டுரைகள் மூலம் வாசித்தும் சொற்பொழிவுகள் மூலம் கேட்டும் மட்டுமல்லாது நேரிடையாகவே நாம் உணரக்கூடிய வகையில் பல சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம். மனிதன் நற்குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது அவனது செயல்கள் நல்லவைகளாக அமைவதுடன் அவனது வாழ்க்கையும் சிறப்பாக அமையும். தீய குணங்கள் தலைதூக்கும்போது  அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். தீயவை எவை என்று தெரிந்துகொண்டே அவற்றை செய்வது அவரைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாது அவரையே அது அழித்துவிடும் என்பதை மனதில்கொண்டு செயலாற்றுவது நன்று.

பொறாமை, சந்தேகம், தற்பெருமை, சுயநலம், போலித்தனம், போலி ஆவணம் தயாரித்தல், அகந்தை, சோம்பேறித்தனம், பிறர் துன்பத்தில் மகிழ்தல், கெட்டவார்த்தைகள் பேசுதல், கூடாத சேர்க்கை, புறம் பேசுதல், பாரபட்சம் பார்த்தல், கோள் சொல்தல், வாக்கு மீறல், பொய்சாட்சி கூறுதல், கேலி செய்தல், வதந்தி பரப்புதல், ஏமாற்றுதல், கலப்படம் செய்தல், பொய், களவு, பாலியல் கொடுமை,  கொள்ளை, கொலை என தீய குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உண்மையும் நேர்மையும் கடவுள் நம்பிக்கையும் எம்மை தீய குணங்களிலிருந்து காப்பாற்றிவிடும்.

தீய குணங்கள் எவ்வாறு எம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதை இங்கு பார்ப்போம். இப்பகுதியில் ஆறு எண்ணங்களைப் பதிவு செய்கிறேன்.

குவியல் 7                                                                                                                  எண்ணம் 1

பொறாமை

ஒருவரிடம் இருக்கக்கூடாத குணங்களில் ஒன்று பொறாமை. மற்றவரின் வளர்ச்சி, திறமை, முயற்சி, உழைப்பு, வெற்றி, செல்வம், அழகு என்பனவற்றைப் பார்த்து ஏற்படுவது பொறாமை. நாமும் அவரைப் போல இருக்கவேண்டும் அல்லது அவரை விட நன்றாக இருக்கவேண்டும், முன்னேறவேண்டும் என்று நல்லவிதமாக முயற்சி செய்வது, பாடுபடுவது தவறில்லை. ஆனால் அவரின் செயல்கள் யாவும் பலனளிக்கக்கூடாது, அவரிடம் இருப்பவை யாவும் அழிந்துவிடவேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. அது மிகவும் தவறான செயலாகும். அந்த நினைவே எமது வளர்ச்சியை தடுத்துவிடும். தகாத செயல்களை செய்யத் தூண்டிவிடும். இறுதியில் எம்மை அழித்தும்விடலாம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

December 26, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு6 எ3

குவியல் 6                                                                                                                   எண்ணம் 3

வீரம்

வீரம் எனும்போது புராண இதிகாசங்களில் கூறப்படும் நாயகர்களின் வீர சாகசங்களைப் பற்றியோ, பண்டைக்கால முடியாட்சி அரசர்களான மகா அலெக்சாண்டர், ராஜ ராஜ சோழன், சூரியவர்மன் போன்றோரின் வீரதீர செயல்கள் பற்றியோ மற்றும் அண்மைக்காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடி வென்ற மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோரின் மனம் தளராத தொடர் போராட்டங்களைப் பற்றியோ அலசி ஆராயாமல் சாதாரண மனிதர்களின் தற்கால அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமான விடயங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

December 16, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு6 எ2

குவியல் 6                                                                                                                   எண்ணம் 2

செல்வம்

செல்வம் எனும்போது நாம் இங்கு பணம், சொத்து என்பனவற்றைப் பார்ப்போம். மனிதன் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ செல்வம் அத்தியாவசியமானதாகும். எமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றை பணம் இன்றி பெறமுடியாது. நேர்மையான முறையில் ஈட்டும் செல்வம் இறுதிவரை எமக்குத் துணையாக வரும். செல்வத்தைப் பெற உழைப்பு முக்கியம். அவரவர்க்கு இயலுமான வழிகளில் பணத்தை சம்பாதிக்கலாம். அரசாங்க வேலைதான் வேண்டும், பெரிய பதவி வரும்வரை வேலை தேடிக்கொண்டே இருப்பேன், என் கல்விக்குத் தகுந்த வேலைக்குத்தான் செல்வேன் என்றெல்லாம் காலத்தைக் கடத்தினால் வாழ்க்கை ஏழ்மை நிலைமையை நோக்கிச் செல்லாம். எனவே விருப்பமான தொழிலுக்கு முயற்சிகளை மேற்கொள்வதுடன் அது கிடைக்கும்வரை சிறு சிறு வேலைகளைச் செய்து உழைப்பதுதான் புத்திசாலித்தனம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·
← Older posts

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved