பிள்ளைகளின் எதிர்காலம் (கல்வி, வேலை, திருமணம்), அவர்களின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்குமா? அல்லது பெற்றோர்களின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்குமா?
பிள்ளைகளின் எதிர்காலம், பெற்றோரின் வழிகாட்டலில் பிள்ளைகளின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எனது கருத்தாகும்.
சில குழந்தைகள் பெற்றோரின் வழிகாட்டலை இயற்கையாகவே ஏற்பவர்களாக இருப்பார்கள். பல குழந்தைகள் எதிர்மறையாகவே யோசிப்பவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் நண்பர்களின் இயல்புகளிலும் இது தங்கியுள்ளது. தீய உள்ளம் கொண்ட நண்பர்களை இனம் கண்டு ஆரம்பத்திலேயே அகற்றுவது பெற்றோரின் தலையாய கடமையாகும். சிறு வயதிலேயே உனக்கு இதுதான் சரி என்று அவர்களின் விருப்பத்தை ஆரம்பத்திலேயே மறுப்பதால் பிடிவாதம் தோன்றி அடம் பிடிப்பார்கள். ஆனால் அவர்களின் போக்கிலே விட்டு சரியான தருணம் பார்த்து அவர்கள் கேட்பதில் உள்ள நன்மை தீமைகளை அவர்களுக்கு புரியும்படி எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார்கள்.
Continue reading