பதில் தெரியாக் கேள்விகள்…

என்றோ முடிந்தது
யுத்தம்…
பார்வைகள் கலந்த தருணத்தில்
உன் இதழ்கள் சிந்திய புன்னகையில்
கணத்திலும் குறுகிய நேரத்தில்
கரைந்துவிட்டேன் பெண்ணே!!!
விண்ணும் மண்ணும் அழகானது…
சுற்றம் சூழல் பொலிவானது…
வெயிலும் மழையும் சுகமானது…
கேட்பவை எல்லாம் இனிமையானது…
தனிமையும் கனவும் சொர்க்கமானது…
காதல் என்னை ஆட்கொண்டபோது!!!
“உன் சோகத்தை யாரிடமும் காட்டாதே, அவர்கள் ஆறுதல் சொல்ல மாட்டார்கள், உன்னை கேலி செய்வார்கள்.
சோகத்தை மறைத்து அவர்கள் பொறாமைப்படும்படி சந்தோஷமாக வாழ்ந்து காட்டு.”
*****
Continue reading →பார்வைகள் கலந்திட
காத்திருக்கின்றேன் பெண்ணே!
நிழலாய் தொடரும் துன்பங்கள்
விலகி மறையும்
மனத் துணிவு பார்த்து…
நிறைந்த செல்வம்
குடும்பத்தில் சிக்கல்
மனதில் குழப்பம்
ஓய்வில்லா உழைப்பின் ஊதியம்…
தினம்
வாசலில் கோலமிடுகின்றேன்
உனக்காகவே…
நீ தந்த வசந்தம்
என்னை விட்டு
உன்னோடு சென்றுவிட்டது…