
பார்வைகள் கலந்த தருணத்தில்
உன் இதழ்கள் சிந்திய புன்னகையில்
கணத்திலும் குறுகிய நேரத்தில்
கரைந்துவிட்டேன் பெண்ணே!!!
பார்வைகள் கலந்த தருணத்தில்
உன் இதழ்கள் சிந்திய புன்னகையில்
கணத்திலும் குறுகிய நேரத்தில்
கரைந்துவிட்டேன் பெண்ணே!!!
குவியல் 3 எண்ணம் 2
காது
ஐம்புலன்களில் ஒன்று செவி என்றும் அழைக்கப்படும் காது.
காதுகள் இரு முக்கிய வழிகளில் எமக்கு உதவுகின்றன. ஒன்று கேட்டல் மற்றையது நாம் நிமிர்ந்து நேராக நிற்பதற்கு எமது உடலின் சமநிலையைப் பேணுதல்.
எமது உறுப்புக்களில் காதின் முக்கியத்துவத்தை பார்ப்போம்.
Continue reading →“வாழ்வில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் குழம்பும்போது, உங்களிடம் இருக்கும் அனைத்திலும் முழு ஈடுபாடு காட்டுங்கள். உங்கள் வாழ்விற்கு எது உகந்ததோ அதை உங்கள் வாழ்வே ஈர்த்துத் தீர்மானிக்கும் . அது ஒருபோதும் தவறாவதில்லை.”
*****
Continue reading →விண்ணும் மண்ணும் அழகானது…
சுற்றம் சூழல் பொலிவானது…
வெயிலும் மழையும் சுகமானது…
கேட்பவை எல்லாம் இனிமையானது…
தனிமையும் கனவும் சொர்க்கமானது…
காதல் என்னை ஆட்கொண்டபோது!!!
குவியல் 3
ஐம்பொறிகள்
கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்பவை ஐம்பொறிகள் ஆகும். ஐம்பொறிகள் மூலம் பெறப்படும் உணர்வுகளாகிய பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் என்பவை ஐம்புலன்கள் எனக் கூறப்படுகிறது. ஐம்பொறிகளின் பயன்கள், அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன, அவற்றை பாதுகாப்பது எப்படி போன்ற விடயங்களை இங்கு பார்ப்போம்.
குவியல் 3 எண்ணம் 1
கண்
ஐம்புலன்களில் ஒன்று கண்.
பார்வையைக் கொடுக்கும் கண்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் எதனால் கண்கள் பாதிப்படைகின்றன என்பதனையும் அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதையும் இங்கு பார்ப்போம்.
Continue reading →“உன் சோகத்தை யாரிடமும் காட்டாதே, அவர்கள் ஆறுதல் சொல்ல மாட்டார்கள், உன்னை கேலி செய்வார்கள்.
சோகத்தை மறைத்து அவர்கள் பொறாமைப்படும்படி சந்தோஷமாக வாழ்ந்து காட்டு.”
*****
Continue reading →குவியல் 2 எண்ணம் 5
சேரிடம் அறிந்து சேர்
மானுடர் ஒவ்வொருவருக்குள்ளும் தேவ குணங்களும் அசுர குணங்களும் உள்ளன. பொய், களவு, சூது, பொறாமை, கோபம், பேராசை, காமம், அகங்காரம், ஆணவம், பிறர் துன்பத்தில் மகிழ்தல், கேலி செய்தல், குறை கூறுதல், கோள் சொல்லுதல், கெட்ட வார்த்தை பிரயோகம் போன்ற தீய குணங்களை அடக்கி செயலிழக்கச் செய்து, நேர்மை, வாய்மை, பொறுமை, அன்பு, பாசம், கனிவு, ஒழுக்கம், பக்தி, முயற்சி, ஈகை, அடக்கம், பணிவு, விட்டுக் கொடுத்தல் போன்ற நல்ல குணங்களை மேலோங்கச் செய்யும் சக்தி எம்மிடம் மட்டுமே உள்ளது. அச் சக்தியை நாம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் எமது வாழ்வு மகிழ்ச்சியான பாதையில் செல்லும் என்பதில் ஐயமில்லை. அடுத்தவர்கள் ஆலோசனை, புத்தி கூறலாம். ஆனால் அதை ஏற்றுக்கொண்டு மாறுவது எம்மால் மட்டுமே முடியும்.
Continue reading →“ஒருநாள் ஒருத்தன்,
குயிலிடம் சொன்னான் – நீ மட்டும் கறுப்பா இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
கடலிடம் சொன்னான் – நீ மட்டும் உப்பாக இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
றோஜாவிடம் சொன்னான் – உன்னிடம் முட்கள் இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.