
அன்றலர்ந்த மலர்போல் வந்து
உள்ளத்தை தழுவிச் சென்றாய்
இன்றோ
விண்ணுலக தேவதைபோல் வந்து
உள்ளத்தில் பதிந்துவிட்டாய்…
அன்றலர்ந்த மலர்போல் வந்து
உள்ளத்தை தழுவிச் சென்றாய்
இன்றோ
விண்ணுலக தேவதைபோல் வந்து
உள்ளத்தில் பதிந்துவிட்டாய்…
“சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தியை இறைவன் மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் கொடுத்து இருக்கிறான்.
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்பமாற்றி கொண்டே வரும்……வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
“ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.
இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.
அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா .
Continue reading →மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.
Continue reading →“
ஒரு ஏழை ஒருவன் துறவியைப் பார்க்கச் சென்றான்.
அவரைப் பார்த்து,
“குருவே! நான் பெரும் ஏழை.
என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.
நான் நல்ல வசதியுடன் வாழ ஒரு வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.
Continue reading →யானை பேசுகிறது
நான் மிகவும் பலசாலி. மனிதர்களால் சுமக்க முடியாத பாரம் மிக்க பொருட்களை என்னால் தூக்கிச் செல்ல முடியும். எனது பலம் வாய்ந்த தும்பிக்கை அதற்கு உதவுகிறது. நாங்கள் தும்பிக்கை மூலமே உணவும் நீரும் உட்கொள்கிறோம். தாவரங்களே எமது உணவு. மரக்கிளைகளை முறித்து உணவைப் பெறுவதற்கு தும்பிக்கையை பயன்படுத்துவோம். தும்பிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடுவோம். வெப்பத்தில் இருந்தும், பூச்சிக்கடியிலிருந்தும் எம்மைப் பாதுகாப்பதற்கு தும்பிக்கையால் சேற்றை அள்ளி உடம்பில் பூசிக் கொள்வோம்.
Continue reading →குவியல் 8
நாட்டையும் நாட்டு மக்களையும் மேம்படுத்தும் நோக்கிலும்; சகல விதங்களிலும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும்; நாட்டு வளங்களும் உயிரினங்களும் அழியாதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கும்; சமயம், கலை, கலாச்சாரத்தையும் சூழலையும் பேணுவதற்கும் ஒரு நாட்டில் பல துறைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மருத்துவம், கல்வி, விசவாயம், நீதி, நிதி, பொறியியல், கட்டுமானம், பாதுகாப்பு, வியாபாரம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, போக்குவரத்து, அரசியல், சுற்றாடல், சமயம், கலாச்சாரம், சுற்றுலா, பொழுதுபோக்கு எனப் பல துறைகள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் வேறுபாடின்றி மக்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிச் சென்று பல சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு துறையிலும் நேரடியாக தொழில்புரிவோரும் மறைமுகமாக தொழில்புரிவோரும் கடமையாற்றுகின்றனர். உதாரணமாக மருத்துவத் துறையில் மருத்துவர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தாதியர், மருந்தாளர்கள் போன்றோர் நேரடி தொடர்புடையவர்கள். மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகள் விற்பனை நிலையங்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் போன்றவை மறைமுக தொடர்புடையவை ஆகும். உயர் பட்டப்படிப்புகளையும் சிறப்புப்பட்டங்களையும் பயிற்சிகளையும் பெற்ற துறைசார் நிபுணர்கள் (Subject Matter Specialist – SMS) ஒவ்வொரு துறையிலும் கடமையாற்றுகின்றனர். இவர்கள் காலத்திற்குக் காலம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இவற்றில் சில துறைகள் சேவை மனப்பான்மை உடையவை ஆகும். இத்துறைகளில் சில துறைகளைத் தெரிவுசெய்து, அவற்றைப்பற்றிய எனது எண்ணங்களை இங்கு பகிர்கிறேன்.
குவியல் 8 எண்ணம் 1
மருத்துவத்துறை
எமக்குத் தெரிந்தளவில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், யுனானி மருத்துவம் என மருத்துவக் கல்வி பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகின்றன. மருத்துவம் என்பது பல்வேறு பதவிகளைக் கொண்ட துறையாகும். இத்துறையில் மருத்துவர், பேராசிரியர், உடற்பயிற்சி/உடலியக்க மருத்துவர் (Physiotherapist), ஊடுகதிரியலாளர்கள் (x-ray), தாதியர் (Nurse), மருந்தாளர் (Pharmacist), மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் (Medical Laboratory Technicians}, மருத்துவச்சி (Midwife) மருத்துவப் பணியாளர் (Attendant) எனப் பலர் கடமையாற்றுகின்றனர். இவர்களில் சிலர் தங்கள் வேலை தொடர்பான சிறப்புப் படிப்புகளையும் பயிற்சிகளையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்று துறைசார் நிபுணர்களாகத் திகழ்கின்றனர்.
Continue reading →“ஒரு பூ மலரும்போது சுற்றிலும் எப்படி நறுமணம் வீசுகிறதோ, அப்படித்தான் தியானமும்.
அது மலர்ந்துவிட்டால் சுற்றியுள்ள அனைவருக்கும் நறுமணம் வீசும்.”
*****
Continue reading →