
நம் எண்ணங்களை தெரிவிக்கவும் பிறரது எண்ணங்களை தெரிந்துகொள்ளவும் மொழி உதவுகிறது.
ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது.
Continue readingநம் எண்ணங்களை தெரிவிக்கவும் பிறரது எண்ணங்களை தெரிந்துகொள்ளவும் மொழி உதவுகிறது.
ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது.
Continue reading →குவியல் 7
ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது எண்ணங்கள் போலவே அமையும் என்பதை பல கட்டுரைகள் மூலம் வாசித்தும் சொற்பொழிவுகள் மூலம் கேட்டும் மட்டுமல்லாது நேரிடையாகவே நாம் உணரக்கூடிய வகையில் பல சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம். மனிதன் நற்குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது அவனது செயல்கள் நல்லவைகளாக அமைவதுடன் அவனது வாழ்க்கையும் சிறப்பாக அமையும். தீய குணங்கள் தலைதூக்கும்போது அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். தீயவை எவை என்று தெரிந்துகொண்டே அவற்றை செய்வது அவரைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாது அவரையே அது அழித்துவிடும் என்பதை மனதில்கொண்டு செயலாற்றுவது நன்று.
பொறாமை, சந்தேகம், தற்பெருமை, சுயநலம், போலித்தனம், போலி ஆவணம் தயாரித்தல், அகந்தை, சோம்பேறித்தனம், பிறர் துன்பத்தில் மகிழ்தல், கெட்டவார்த்தைகள் பேசுதல், கூடாத சேர்க்கை, புறம் பேசுதல், பாரபட்சம் பார்த்தல், கோள் சொல்தல், வாக்கு மீறல், பொய்சாட்சி கூறுதல், கேலி செய்தல், வதந்தி பரப்புதல், ஏமாற்றுதல், கலப்படம் செய்தல், பொய், களவு, பாலியல் கொடுமை, கொள்ளை, கொலை என தீய குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உண்மையும் நேர்மையும் கடவுள் நம்பிக்கையும் எம்மை தீய குணங்களிலிருந்து காப்பாற்றிவிடும்.
தீய குணங்கள் எவ்வாறு எம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதை இங்கு பார்ப்போம். இப்பகுதியில் ஆறு எண்ணங்களைப் பதிவு செய்கிறேன்.
குவியல் 7 எண்ணம் 1
பொறாமை
ஒருவரிடம் இருக்கக்கூடாத குணங்களில் ஒன்று பொறாமை. மற்றவரின் வளர்ச்சி, திறமை, முயற்சி, உழைப்பு, வெற்றி, செல்வம், அழகு என்பனவற்றைப் பார்த்து ஏற்படுவது பொறாமை. நாமும் அவரைப் போல இருக்கவேண்டும் அல்லது அவரை விட நன்றாக இருக்கவேண்டும், முன்னேறவேண்டும் என்று நல்லவிதமாக முயற்சி செய்வது, பாடுபடுவது தவறில்லை. ஆனால் அவரின் செயல்கள் யாவும் பலனளிக்கக்கூடாது, அவரிடம் இருப்பவை யாவும் அழிந்துவிடவேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. அது மிகவும் தவறான செயலாகும். அந்த நினைவே எமது வளர்ச்சியை தடுத்துவிடும். தகாத செயல்களை செய்யத் தூண்டிவிடும். இறுதியில் எம்மை அழித்தும்விடலாம்.
Continue reading →“உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும்.
பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.”
*****
Continue reading →குவியல் 6 எண்ணம் 3
வீரம்
வீரம் எனும்போது புராண இதிகாசங்களில் கூறப்படும் நாயகர்களின் வீர சாகசங்களைப் பற்றியோ, பண்டைக்கால முடியாட்சி அரசர்களான மகா அலெக்சாண்டர், ராஜ ராஜ சோழன், சூரியவர்மன் போன்றோரின் வீரதீர செயல்கள் பற்றியோ மற்றும் அண்மைக்காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடி வென்ற மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோரின் மனம் தளராத தொடர் போராட்டங்களைப் பற்றியோ அலசி ஆராயாமல் சாதாரண மனிதர்களின் தற்கால அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமான விடயங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
Continue reading →“படித்தவர் எல்லோரும் அறிவாளிகளும் அல்ல.
படிக்காதோர் எல்லோரும் முட்டாள்களுமல்ல.”
*****
Continue reading →குவியல் 6 எண்ணம் 2
செல்வம்
செல்வம் எனும்போது நாம் இங்கு பணம், சொத்து என்பனவற்றைப் பார்ப்போம். மனிதன் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ செல்வம் அத்தியாவசியமானதாகும். எமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றை பணம் இன்றி பெறமுடியாது. நேர்மையான முறையில் ஈட்டும் செல்வம் இறுதிவரை எமக்குத் துணையாக வரும். செல்வத்தைப் பெற உழைப்பு முக்கியம். அவரவர்க்கு இயலுமான வழிகளில் பணத்தை சம்பாதிக்கலாம். அரசாங்க வேலைதான் வேண்டும், பெரிய பதவி வரும்வரை வேலை தேடிக்கொண்டே இருப்பேன், என் கல்விக்குத் தகுந்த வேலைக்குத்தான் செல்வேன் என்றெல்லாம் காலத்தைக் கடத்தினால் வாழ்க்கை ஏழ்மை நிலைமையை நோக்கிச் செல்லாம். எனவே விருப்பமான தொழிலுக்கு முயற்சிகளை மேற்கொள்வதுடன் அது கிடைக்கும்வரை சிறு சிறு வேலைகளைச் செய்து உழைப்பதுதான் புத்திசாலித்தனம்.
Continue reading →“நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார்.
அரசன் கோபமாக ” நான் என்ன சின்னக் குழந்தையா? ” இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார்.
Continue reading →