
“கண்ணுக்குத்தெரியாத எதிர்காலத்தை
கவலையுடன் எதிர்நோக்குவதைவிட
எதுவாக இருந்தாலும்
ஒரு கை பார்த்துவிடவேண்டும்
என்ற துணிச்சலுடன் வாழந்தால்,
வாழ்க்கை பிரகாசிக்கும் .”
*****
Continue reading“கண்ணுக்குத்தெரியாத எதிர்காலத்தை
கவலையுடன் எதிர்நோக்குவதைவிட
எதுவாக இருந்தாலும்
ஒரு கை பார்த்துவிடவேண்டும்
என்ற துணிச்சலுடன் வாழந்தால்,
வாழ்க்கை பிரகாசிக்கும் .”
*****
Continue reading →குவியல் 5 எண்ணம் 2
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
தவறுகள் செய்வது மனித இயல்பு. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், தவறு என்று தெரிந்தும் அதை தொடர்ந்து செய்பவர்களும் இருக்கிறார்கள். தாங்கள் செய்யும் தவறுகளை உணராமல் அடுத்தவர்களின் தவறுகளை பார்த்து குறை கூறுவதிலேயே குறியாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
Continue reading →ஒரு பறவை உயிருடன் இருக்கும்பொழுது
எறும்பை சாப்பிடுகிறது
பறவை இறந்தபின்பு எறும்பு
அதனை சாப்பிடுகிறது
இதன் மூலம் அறிந்து கொள்வது
நேரமும், சூழ்நிலையும் எந்த நேரமும் மாறலாம்.
*****
Continue reading →குவியல் 5
முகவுரை
வையகத்தில் எப்படி வாழவேண்டும் என்று எளிய முறையில் கூறும் நீதி நூல்கள் எல்லோர் மனதிலும் பதியப்படவேண்டியவை. இவை கூறும் கருத்துக்களை படித்து அறிவது மட்டுமன்றி வாழ்வில் கடைப்பிடிக்கவும் பழகினோமேயானால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நீதிநூல்களில் கொன்றைவேந்தனும் ஒன்றாகும்.. நீதியை நிலைநிறுத்தும் கொன்றைவேந்தனில் ஐந்தினை தெரிவுசெய்து இங்கு எனது எண்ணங்களை பதிவுசெய்கிறேன்.
குவயல் 5 எண்ணம் 1
கிட்டாதாயின் வெட்டென மற
மனம் ஒரு குரங்கு என்று சொல்வர். எப்போதும் அது அங்கே இங்கே என்று அலைந்து திரியும். கடவுளை வணங்கும்போதும் அதை அடக்கி ஒருநிலைப்படுத்திவிட்டால் ஓரிரு நிமிடங்களில் அது மீண்டும் கட்டவிழ்த்து சென்றுவிடும். எந்நேரமும் அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது மிகவும் கடினம்.
Continue reading →“ஐந்து வினாடிப் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால், எப்போதும் புன்னகை, வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும். வாழ்க்கையை அழகுடன் வாழுங்கள்.”
*****
Continue reading →அமைதியில் அழகைப் பார்த்து ரசிக்கின்றேன்
கோபத்தில் சீற்றம் கண்டு மலைக்கின்றேன்
கொட்டிக்கிடக்கும் அதிசயம் நினைத்து வியக்கின்றேன்
மறைந்திருக்கும் இரகசியம் தேடி தவிக்கின்றேன்
புரியாத புதிராய் இருக்கும் அன்னையே!
உன்னை
பணிகின்றேன்
ஆராதிக்கின்றேன்
காதலிக்கின்றேன்!!!
குவியல் 4 எண்ணம் 5
ஆழம் அறியாமல் காலை விடாதே
எம்மை சிந்திக்க வைக்கும் முன்னோர்கள் கூறிய பழமொழிகளுள் ஒன்று ‘ஆழம் அறியாமல் காலை விடாதே’. இம் முதுமொழி எமது வாழ்க்கையில் எப்படி பயன் தருகிறது எனப் பார்ப்போம்.
நீரின் ஆழம் தெரியாமல் காலை வைத்தால் அதில் மூழ்கி தொலைந்துவிடும் வாய்ப்புள்ளது. அதே போலத்தான் நாம் செய்யும் செயலின் ஆழம் தெரியாமல் தொடங்கினால் அதில் சிக்குண்டு தத்தளிக்க நேரலாம்.
Continue reading →“மண்வெட்டியை பிடிக்கின்ற உழைப்பளியுடைய கரங்கள் ஆரம்பத்தில் சிவந்து பின் கிழிந்து கடைசியில் பாறை மாதிரி உரமாகும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனதையும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகிவிடும். அப்படி ஒரு மனது அமைந்துவிட்டால் வாழ்க்கையில் எந்த சிகரத்திலும் கூடு கட்டி குடியிருக்கலாம்.”
*****
Continue reading →