Author Archive
December 3, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு6 எ1
குவியல் 6 முகவுரை எமது வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அவசியம் என்பது யாவரும் அறிந்ததே. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. நாம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு செல்வம் தேவை. செல்வத்தை நேர்வழியில் ஈட்டுவதற்கு கல்வி முக்கியம். ஈட்டிய அச் செல்வத்தையும் எம்மையும் பாதுகாப்பதற்கு வீரம் அத்தியாவசியமாகின்றது. வீரம் எனும்போது அடி, தடி, சண்டைதான் வீரம் என நினைக்கக்கூடாது. துணிவும் சமயோசித புத்தியையும் வீரம் எனக்கொள்வோம். இப்பகுதியில் கல்வி, […]
November 27, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 147
“உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் உன் குற்றமில்லை.கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே.அது பார்க்கப்படுபவன் பிழை அல்ல, பார்ப்பவன் பிழை.” *****
November 27, 2024 by Gowry Mohan
சீர் செய்து தா…
உன் பார்வையில்மலர்ந்த இதயம்தடம் புரண்டுஇடம் மாறியதுஉன் புன்னகையில்!!!
November 21, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு5 எ5
குவியல் 5 எண்ணம் 5 தோழனோடும் ஏழமை பேசேல் எக்காலத்திலும் எம் வாழ்க்கையை உயர்த்தும் காரணிகளுள் நேர்மறை எண்ணங்களும் ஒன்றாகும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் வறுமை எம்மைப் பீடித்தாலும் மனம் தளராமல், எல்லாம் சில நாட்களில் மாறிவிடும் என்ற எண்ணம் மனதில் பதிந்திருத்தல் வேண்டும். இதுவும் கடந்து போகும் என்ற நினைப்புடன் முயற்சியைக் கைவிடாது பாடுபட வேண்டும். தோல்விகளைக் கண்டு அஞ்சலாகாது. முயற்சிகள் தொடரவேண்டும். முயலும் வழிகளை மாற்றலாம். நேர்வழியாக இருந்துவிட்டால் தாமதமானாலும் நிரந்தரமான […]
November 17, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 146
“நாம் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய நான்கு பேர் நம்மை சுற்றி இருந்தால் , நாம் எத்தனை துன்பத்திலும் நல்லா இருப்போம்.
November 17, 2024 by Gowry Mohan
காணாமல் போனேன்…
விழிகள் உரசிபற்றிய காதலில்இதயம் உருகிநீயானாய்…
November 13, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு5 எ4
குவியல் 5 எண்ணம் 4 கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி ஒரு நாட்டில் வாழும் மக்களை ஏழை, மத்தியதர, பணக்கார வர்க்கத்தினர் என பிரித்தறியலாம். இந்த மூன்று வர்க்கத்தினருள்ளும் படித்தவர்களும் இருக்கிறார்கள், படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவரவர் திறமைகளுக்கு ஏற்ப உழைக்கும் வழி அமைந்திருக்கும்.
November 8, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 145
“ஆங்கிலம் பேசும்போது அதில் தமிழ் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நாம்,தமிழ் பேசும்போது அதே கவனத்தை மனதுள் கொள்வதில்லை.” *****
November 8, 2024 by Gowry Mohan
பெண்ணாலே…
பெண்ணாய் பிறந்ததில்பெருமை கொள்வோம்நற்பண்புகள் கொண்டுவாழ்ந்திடுவோம்…
November 2, 2024 by Gowry Mohan