எதிரி

அன்பால் கட்டிவைத்து
பாசத்தால் மூழ்கடித்து
காதலால் திணறடித்து
புரிந்துணர்ந்து
விட்டுக்கொடுத்து
வாழ்க்கைத் துணையோடு
இணைந்து வாழும் வாழ்க்கை
என்றென்றும் சொர்க்கமே…
வைர மலர் தோட்டத்திலே
உலாவரும் வெண்ணிலா…
விண்ணை அழகூட்டி
மேகத்தை தழுவிச் செல்லும்
பால்நிலா…!!!
வண்ண மலர் தோட்டத்திலே
பவனி வரும் பெண்ணிலா…
மண்ணை மெருகேற்றி
என் உள்ளத்தை தழுவிச் செல்லும்
காதல் நிலா!!!