
“ஒருவன் தன்னைத்தானே
நான் யார் என்று
சிந்திக்க ஆரம்பித்து விட்டால்
அவனுக்குள்
ஆன்மிகம் ஆரம்பித்துவிடும்.
அவன்
அவர்கள் யார் என்று
சித்திக்க ஆரம்பிப்பதால்தான்
அவனுக்குள்
உலக துன்பங்கள்
உள்ளுக்குள் வர ஆரம்பிக்கின்றன.
“ஒருவன் தன்னைத்தானே
நான் யார் என்று
சிந்திக்க ஆரம்பித்து விட்டால்
அவனுக்குள்
ஆன்மிகம் ஆரம்பித்துவிடும்.
அவன்
அவர்கள் யார் என்று
சித்திக்க ஆரம்பிப்பதால்தான்
அவனுக்குள்
உலக துன்பங்கள்
உள்ளுக்குள் வர ஆரம்பிக்கின்றன.
காலையில் மென்மையாய் அணைத்து
இதம் தருகின்றாய்
மதியம் இறுக அணைத்து
வாடச் செய்கின்றாய்
மாலையில் அணைப்பை தளர்த்தி
மறைந்து போகின்றாய்
மறவாமல் மறுநாள் காலையில்
மீண்டும் வருகின்றாய்…
குவியல் 7 எண்ணம் 4
பிறர் துன்பம் கண்டு மகிழ்தல்
பிறரை துன்பப்படுத்தி மகிழ்வதும் பிறரது துன்பத்தைப் பார்த்து மகிழ்வதும் ஒருவித மனநோய் ஆகும். இவர்களை ஆங்கிலத்தில் sadists எனக் கூறுவர். அந்த நோயை தாங்களே அனுபவித்தோ அல்லது உணர்ந்தோதான் குணப்படுத்த முடியும். ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்ற முதுமொழி கூறுவது போல நாம் பிறருக்குச் செய்வது சுவரில் அடித்த பந்துபோல திரும்பி எம்மை வந்தடையும். நல்லது செய்தாலோ நினைத்தாலோ எமக்கும் நல்லதே நடக்கும். கெட்டது நினைத்தாலோ செய்தாலோ அது திரும்பி வந்து எம்மைத் தாக்கும்.
Continue reading →“புன்னகை செய்வதற்கு மட்டுமே உங்கள் இதழ்களை பயன்படுத்துங்கள்.
மற்றவர்கள் மனம் புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.”
*****
“வீழ்வது அவமானம் அல்ல.
வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்.”
*****
Continue reading →குவியல் 7 எண்ணம் 3
சுயநலம்
சுயநலம் என்பது தன்னை மட்டுமே கருத்திற்கொண்டு செயல்களைப் புரிவதும் சிந்திப்பதும் பேசுவதுமாகும். மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருத்தல் முக்கியம் என்ற மனநிலையில் செயற்படுவது, உணவு, உடை, பொருட்கள் என்பவற்றை தானே முதலில் தெரிவுசெய்வது, அடுத்தவர்களின் கஷ்டங்களை உணர்வுகளை தெரிந்து கொண்டும் அவர்களைக் கொண்டு வேலை செய்விப்பது, தனது தேவைகளை திருப்தியாகப் பூர்த்தி செய்து மற்றவர்களின் தேவைகளைப்பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது என்பவை சுயநலமாக நடத்தல் ஆகும். ஒருவரது சுயநலம் மற்றவர்களைப் பாதிக்கும் வண்ணம் இருப்பது மிகவும் தவறாகும். பெருமைக்காகவும் புகழுக்காகவும் சேவை செய்பவர்களும் சுயநலவாதிகளே.
Continue reading →“நீங்கள் அனுபவிக்கும் எதுவுமே வாழ்க்கைதான்.
மரணம் என்பதும் கூட வாழ்க்கைதான்.
ஆனால் அது உங்கள் வாழ்க்கையின் கடைசி விநாடியில் வருகிறது, அவ்வளவுதான்.”
*****
Continue reading →குவியல் 7 எண்ணம் 2
சந்தேகம்
சந்தேகம் என்பது புற்றுநோயைப் போன்றது. புற்றுநோய் எவ்வாறு உடலில் பரவி உடலை அரிக்கிறதோ அதேபோல் சந்தேகம் எனும் நோய் மனதில் வேகமாகப் பரவி மனதை அரித்து நிம்மதியை அழித்துவிடும். எனவே சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால் அதனை ஆராய்ந்து பார்த்தோ, மனம்விட்டுக் கதைத்தோ அல்லது தீர விசாரித்தோ நீக்கிவிடுவதே நல்வாழ்வுக்கு உகந்ததாகும்.
Continue reading →“உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்
ஏன் என்றால் வேறு எவராலும்
உங்கள் கால்களை
கொண்டு நடக்க முடியாது.”
*****
Continue reading →