
உணவாக உதிரத்தை
உறிஞ்சியதை
நினைத்துப் பார்…
அக்கணமே அழிந்து போகும்
உணவுக்காய் அன்னையை
தவிக்கவைக்கும்
உன் எண்ணம்…
உணவாக உதிரத்தை
உறிஞ்சியதை
நினைத்துப் பார்…
அக்கணமே அழிந்து போகும்
உணவுக்காய் அன்னையை
தவிக்கவைக்கும்
உன் எண்ணம்…
குவியல் 4 எண்ணம் 4
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
கல்வியுடன் சிறந்த பண்புகளையும் நல்ல பழக்கவழக்கங்களையும் நற்குணங்களையும் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே புகட்டிவிட வேண்டும். அவை பசுமரத்தாணி போல அவர்கள் மனதில் பதிந்து பெரியவர்களானதும் நற்பிரஜைகளாக வாழ வழிவகுக்கும். சிறு பிள்ளைகள் தானே, இன்னும் கொஞ்சம் வளர்ந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று செல்லம் கொடுத்து அலட்சியமாக இருக்கக்கூடாது. பிள்ளைகள் வளர வளர தாங்கள் நினைத்தபடி எல்லாம் செய்யலாம் என்ற எண்ணமும் பிடிவாதமும் சிறிது சிறிதாக தலைதூக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் அவர்களை மாற்றுவது மிகவும் கடினம்.
Continue reading →“தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.”
*****
“வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.”
*****
Continue reading →புன்னகையால் பிடித்து வைத்து
புது உலகம் அழைத்துச் சென்றாய்…
கண்ணசைவால் காதல் சொல்லி
சொர்க்கத்தை காட்டிவிட்டாய்…
குவியல் 4 எண்ணம் 3
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
உற்பத்தி செய்யும் பொருட்களில் தரமானதும் இருக்கும். போலியானதும் இருக்கும். அவற்றைப் பிரித்தறிவது மிகவும் கடினம். விற்பனையாளர்கள் பொருட்களைத் தரமானது என்று கூறித்தான் வியாபாரம் செய்வார்கள். தரமான பொருட்கள் நீண்டகாலம் பாவிக்கும். போலியானவை விரைவில் பழுதடைந்து போய்விடும். அவற்றை ஆராய்ந்து பார்த்துத்தான் வாங்கவேண்டும்.
Continue reading →“எனது மதம் மட்டுமே சிறந்தது.
அது மட்டுமே எனக்கு வேண்டும்”
எனச் சொல்லும்……
ஒரு இந்துவோ அல்லது
ஒரு இஸ்லாமியரோ அல்லது
ஒரு கிருத்துவரோ அல்லது
மற்ற மதத்தவரோ…,
பெண்ணே!
ஒற்றைப் பார்வையில்
என் உயிருடன் கலந்து
உன்னைச் சுமக்கும்
பொறுப்பைத் தந்துவிட்டாய்…
குவியல் 4 எண்ணம் 2
பேராசை பெருநட்டம்
வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு ஆசை இருக்கவேண்டும். ஆசை உந்துசக்தியாக செயற்படுகிறது. ஆசை எமது சக்திக்கும் தகுதிக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும். எம்மால் இயலாததற்கு ஆசைப்படக்கூடாது. அது எம்மை தவறான பாதையில் அழைத்துச் சென்று அழிவைத் தந்துவிடும். அத்துடன் அளவுக்கு அதிகமாக பேராசைப்படவும் கூடாது. பேராசை என்பது எமது சக்திக்கும் வருமானத்திற்கும் அப்பாற்பட்டது. எம்மிடம் இருக்கும் செல்வத்தையும் அது அள்ளிச் சென்றுவிடும். ஆசைக்கு ஒரு எல்லை வகுத்தோமெனில் வாழ்க்கை சுமுகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
Continue reading →” நிராகரிக்கப்பட்டவுடன் உங்கள் முதல் எதிர்வினை, வருத்தமாகவோ, கோபமாகவோ, ஆத்திரமாகவோ, விரக்தியாகவோ இருக்கக் கூடாது. மாறாக, இப்படி ஒருவரை நிராகரித்து விட்டோமே என அவர் வருந்தும் வண்ணம் வளர்ந்து காட்ட வேண்டும். அந்த இலக்கை நோக்கி உழைப்பதே தக்க எதிர்வினை….”
*****
Continue reading →குவியல் 4
முகவுரை
மிக முக்கியமான பயனுள்ள கருத்துக்களை பாமர மக்களும் புரியும் வண்ணம் ஒரு வரியில் புதைத்து வைத்திருக்கின்றார்கள் எமது முன்னோர்கள். அவையே முதுமொழிகள் என்றும் அழைக்கப்படும் பழமொழிகள் ஆகும். அவர்களின் அறிவும் புலமையும் எம்மை வியக்கவைக்கின்றன. இன்றும் வீட்டிலுள்ள பெரியவர்கள் அறிவுரையோ புத்திமதியோ கூறும்போது பழமொழிகளை உபயோகப்படுத்துவதைக் கண்கூடாகக் காணலாம். அவையே அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் தங்கள் பிள்ளைகளை வழிநடத்த மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மறுக்கமுடியாது.
முன்னோர்களின் அனுபவக்குறிப்புக்களான பழமொழிகளில் ஐந்தினை தெரிவுசெய்து இங்கு எனது எண்ணங்களை பதிவுசெய்கின்றேன்.
குவியல் 4 எண்ணம் 1
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
எமது உள்ளத்தில் ஏற்படும் எல்லா உணர்ச்சிகளையும் வெளியுலகிற்குக் காட்டிக்கொடுத்துவிடும் எமது முகம். உள்ளத்தை யாராலும் பார்க்க முடியாது. அனால் அதைக் காட்டும் கண்ணாடியாக முகம் தொழிற்படுகின்றது. எமது முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் நாம் என்ன மனநிலையில் இருக்கின்றோம் என்பதை அப்பட்டமாக கூறிவிடும்.
Continue reading →