
குளிரும் நிலவாக
மின்னும் தாரகையாக
தவழும் தென்றலாக
அழகு மலராக
மயக்கும் தேவதையாக
ஆளும் அரசியாக
என்னுள் நீ!!!

குளிரும் நிலவாக
மின்னும் தாரகையாக
தவழும் தென்றலாக
அழகு மலராக
மயக்கும் தேவதையாக
ஆளும் அரசியாக
என்னுள் நீ!!!

“வாழ்வின் இசை என்பதே பெண்களின் சிரிப்பில்தான் புதைந்து கிடக்கிறது.
பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில்தான் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது.”
*****
“நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் தன்னம்பிக்கையை காப்பாற்றுவது.”
*****
Continue reading →
முன்னோரின் அனுபவக் குறிப்புக்கள் பழமொழிகளாகும்.
பழமொழியை முதுமொழி என்றும் சொல்வர்.
Continue reading →குவியல் 7 எண்ணம் 6
வாக்கு மீறல்

எதற்காவது நாம் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் அதை மீறுதல் கூடாது. அவர் பெரியவராக இருந்தாலும் சிறு பிள்ளையாக இருந்தாலும் அச்செயல் அவர்கள் மனதை நோகச் செய்துவிடும். எம்மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவோம். வாக்குறுதி கொடுக்குமுன் அதை செயற்படுத்த முடியுமா எனச் சிந்தித்துப் பார்த்தல் அவசியமாகும். எம்மால் முடியாத விஷயங்களுக்கு வாக்குக் கொடுக்கக் கூடாது. அவசிய தேவைக்காக சிந்தித்துப் பாராது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வாக்குக் கொடுத்து காரியத்தை முடிப்பது பெரும் தவறான செயலாகும். சிலவேளைகளில் அந்த வாக்கை நிறைவேற்றமுடியாது போக வாய்ப்புண்டு. இது அடுத்தவரை ஏமாற்றும் செயலாகும்.
Continue reading →
“இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம், ஆனால் தாழ்ந்து போவதில்லை.
ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம், ஆனால் கடைசிவரை சாதிப்பதில்லை.”
*****
“நாக்கு ஒரு தீ.
ஆக்கவும் அழிக்கவும் வல்லது.
கவனமாகப் பயன்படுத்துங்கள்.”
*****
Continue reading →குவியல் 7 எண்ணம் 5
சோம்பேறித்தனம்

காலத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அது தன்பாட்டில் போய்க்கொண்டே இருக்கும். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நாம்தான் அதன் பின்னே ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அதற்கு சுறுசுறுப்பும் சுயவிருப்பமும் மிக மிக அவசியமாகும். ஒருவரை அசையவிடாது இழுத்து வைத்திருக்கும் காரணிகளில் ஒன்று சோம்பேறித்தனமாகும். வாழ்க்கையில் பின்தங்கி நிற்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் சோம்பேறித்தனமானது முன்னேற்றப் பாதையில் காணப்படும் தடைக்கற்களில் ஒன்று எனவும் கொள்ளலாம்.
Continue reading →
“ஒருவன் தன்னைத்தானே
நான் யார் என்று
சிந்திக்க ஆரம்பித்து விட்டால்
அவனுக்குள்
ஆன்மிகம் ஆரம்பித்துவிடும்.
அவன்
அவர்கள் யார் என்று
சித்திக்க ஆரம்பிப்பதால்தான்
அவனுக்குள்
உலக துன்பங்கள்
உள்ளுக்குள் வர ஆரம்பிக்கின்றன.

காலையில் மென்மையாய் அணைத்து
இதம் தருகின்றாய்
மதியம் இறுக அணைத்து
வாடச் செய்கின்றாய்
மாலையில் அணைப்பை தளர்த்தி
மறைந்து போகின்றாய்
மறவாமல் மறுநாள் காலையில்
மீண்டும் வருகின்றாய்…
குவியல் 7 எண்ணம் 4
பிறர் துன்பம் கண்டு மகிழ்தல்

பிறரை துன்பப்படுத்தி மகிழ்வதும் பிறரது துன்பத்தைப் பார்த்து மகிழ்வதும் ஒருவித மனநோய் ஆகும். இவர்களை ஆங்கிலத்தில் sadists எனக் கூறுவர். அந்த நோயை தாங்களே அனுபவித்தோ அல்லது உணர்ந்தோதான் குணப்படுத்த முடியும். ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்ற முதுமொழி கூறுவது போல நாம் பிறருக்குச் செய்வது சுவரில் அடித்த பந்துபோல திரும்பி எம்மை வந்தடையும். நல்லது செய்தாலோ நினைத்தாலோ எமக்கும் நல்லதே நடக்கும். கெட்டது நினைத்தாலோ செய்தாலோ அது திரும்பி வந்து எம்மைத் தாக்கும்.
Continue reading →