மனோதைரியம் ஆண் பெண் இருவரில் யாருக்கு அதிகமாக உள்ளது? ஆண்களுக்கா? பெண்களுக்கா?
ஆணை விட பெண்ணே மனோதைரியம் மிக்கவள் என்பது எனது கருத்து. இது இறைவன் கொடுத்த வரம்.
திருமணம் செய்து புகுந்த வீடு செல்கிறாள் பெண். அங்கே பழகப் பழகத்தான் அவர்களுடைய உண்மையான குணங்களை அறியலாம். புது உறவுகளுடன் சுமுகமான முறையில் நடந்து, எல்லோரையும் சமாளித்து வாழ வேண்டும், அவர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும், கணவரினதும் மற்றவர்களினதும் வெறுப்புக்குள்ளாகாது எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலப்பல விஷயங்களை எதிர்நோக்கும் மனோதைரியத்துடனே புகுந்த வீடு செல்கிறாள். புகுந்த வீட்டுக்குச் செல்ல பயமாயிருக்கிறது என்று எந்தப் பெண்ணும் திருமணத்தை மறுப்பதில்லை.
Continue reading