
“அழகான உறவிற்கு அடிப்படை விட்டுக்கொடுக்கும் தன்மையும், விருப்பமும் தான். நீங்கள் எவ்வளவு பேரானந்தமாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் இவை இரண்டும் அமையும்.”
*****
“புகழ் மிக்கவராக இருக்கவேண்டும் என்பது ஒரு நோய். இந்த நோய்வாய்ப்பட்டவர்கள், அதற்காக அத்தனை விதமான முட்டாள்தனங்களையும் செய்வார்கள்.”
*****
“முட்டாள்களுக்கு சிறந்த பதில் மௌனம்.”
*****
“உன் மனம் ஒன்றே
உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்!
அது தெளிவாக இருக்கும் வரையில்
நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.”
*****
“தலைகணம் இழப்பவர் தலை நிமிர முடியும்.
தீக்குச்சி தன் தலையை இழந்த
பின்பு தான் ஒளியை வெளியிடுகிறது.”
*****
“பலவீனர்கள் பிறரை மன்னிக்க மாட்டார்கள்
மன்னிப்பது என்பது வலிமையுடையோரின் குணம் – மகாத்மா காந்தி”
*****
“துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புக்கள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன – ஆல்பர்ட ஐன்ஸ்டீன்”
*****
“வெற்றி பெற காது கொடுத்து கேளுங்கள். குறைவாக பேசுங்கள்.
நிறைய நேரம் செயல்படுங்கள் – ஏ.வான்ப்ரன்”
*****
“பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.
ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.”
*****