
“உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே…
ஏன் என்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு.”
*****
“வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்…
தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்.”
*****
“பூக்களாய் இருக்காதே
அழகு தான் ஆனால்
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்பொழுதான்
பூத்துக்கொண்டே இருப்பாய்.”
*****
“புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காக்கும்.”
*****
“மரணத்தை பற்றி கவலை படாதே
நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை
அது வரும் போது நீ இருக்கப்போவதில்லை
பிறகு எதற்கு கவலை.”
*****