
“உனக்கு இருப்பவைகளுக்காக நன்றிகொள்.
உனக்கு இருக்கும் வாழ்க்கை அநேகருக்கு இல்லை.”
*****
“பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நிலை தளரக்கூடாது.”
*****
“துயரம் ஒரு பாறை – தூக்க கூடாது – தாண்டிதான் செல்லவேண்டும்.
துன்பம் ஒரு கடல் நீர் – மூழ்க கூடாது – நீந்திதான் செல்லவேண்டும்.”
*****
“அமைதி ஒரு புத்தகத்திலோ, ஒரு இடத்திலோ, ஒரு மலை உச்சியிலோ இல்லை, ஆனால் அது ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறது. அதை கண்டுகொள்ள வேண்டும். மனிதர்கள் என்ற ரீதியில் நமது பிரதான கனவு என்னவாக இருக்கவேண்டும்? நமக்குள்ளே உள்ள அந்த அமைதியை கண்டுகொண்டு அதை அனுபவிக்க வேண்டும் என்பதேயாகும்.”
*****
“நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே.
நீ விரும்புவதை யார் எதிர்த்தாலும் செய்து முடி.”
*****
“தோல்வி என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் எதுவும் இல்லை.”
*****
“நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று சொல்பவன் முட்டாள்.
அறிவுள்ளவன் நேற்றே அதை செய்து முடித்திருப்பான்.”
*****
“செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட்டாது மறையமாட்டாது.”
*****
“நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.
முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை.
முதல் படி ஏறு. “
*****