
“குழந்தையை சிறப்பாக வளர்க்கவேண்டுமென்றால் நாம் முதலில் வளரவேண்டும். குழந்தையை வளர்ப்பது பற்றியெல்லாம் கவனம் வைத்துக்கொள்ள வேண்டாம். நான் வளரவேண்டும் என்று கவனம் வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்கள் அருகில் இருந்தாலே குழந்தை நன்றாக வளர்ந்துவிடும். எங்கேயும் ஒரு மோசமான தாய், தந்தை இருக்கலாம், மோசமான டீச்சர் இருக்கலாம், ஆனால் மோசமான குழந்தை கிடையாது.”
*****
“நிஜமாகவே பசிக்கு துடித்துக்கொண்டிருக்கும் ஜீவன் உங்கள் முன் கையேந்தும்போது இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றால் அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.”
*****
“ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்துவிடாது. ஆனால் அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகிவிடும். நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவோம். அதனால் நாம் இழக்கப்போவது எதுவுமில்லை.”
*****
“நல்லவர்களின் கடினமான வார்த்தைகள் கசப்பானதுதான், ஆனால் நோயை குணப்படுத்தும்.
தீயவர்களின் சிரிப்பு விஷம் போன்றது, ஆளைக் கொல்லும் சக்தியுடையது.”
*****
“சுமைகளைக் கண்டு நீ துவண்டுவிடாதே, இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்.”
*****