
“நல்லதை செய்பவன் உன்னுடைய எதிரியாக இருந்தாலும்
அவனோடு சேர மறுக்காதே
கேட்டதை செய்பவன் உன்னுடைய நண்பனாக இருந்தாலும்
அவனை விட்டு விலக மறக்காதே”
*****
“பசித்தவனுக்குத்தான் தெரியும் பசியின் கொடுமை.
விழுந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை.
இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை.”
*****
“இழந்துவிட்டால் வலி.
விட்டுக்கொடுத்தால் நிறைவு.
ஓடி ஒழிந்துகொண்டால் பயம்.
விட்டு விலகிச் சென்றால் தியாகம்.
வாழ்த்தி நின்று பார் தெரியும் அன்பு.”
*****
“ஓடும்போது விழுந்து விடுவோம்
என்று நினைப்பவனை விட
விழுந்தாலும் எழுந்து ஓடுவேன்
என்று நினைப்பவன் ஜெயிப்பான்.”
*****
“ஒரு சொல் போதுமென்றால்
இரு சொற்க்களை செலவு செய்யாதே…
எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை
என்றால் அந்த ஒரு சொல்லையும்
விரையமாக்காதே.”
*****
“இலட்சியம் இல்லாத வாழ்க்கை
முள் இல்லாத கடிகாரம் போன்றது
அது நின்றாலும் பயன் இல்லை
ஓடினாலும் பயன் இல்லை.”
*****
“தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய்.
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.”
*****
“வில்லில் இருக்கும் அம்பு கூட பின்னோக்கிச் சென்றால் தான் முன்னே வந்து தன் இலக்கை நோக்கி பாய முடியும்.
பின்னடைவுகள் ஒவ்வொன்றும் உங்களை முன்னேற்றிச் செல்லத்தான் வருகின்றன என்று நினைத்துக் கொள்ளுங்கள்.”
*****
“ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.
4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்று கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது, நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.
12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.
தன்னலமில்லாத , செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான். “
*****