
வையகத்தில் பிறந்துள்ளோம்
மகிழ்வோடு வாழ்வதற்கு…
மகிழ்வை தொலைத்து
இயந்திரமாய் வாழ்கிறீர்களா…
கவலை வேண்டாம்…
மகிழ்வு எங்கேயென
சொல்கிறேன்
கேளுங்கள்…
அன்பில் உள்ளது
அதை கொடுப்பதில் உள்ளது…
உழைப்பில் உள்ளது
பிறருக்கு உதவுவதில் உள்ளது…
திருப்தியில் உள்ளது
கிடைப்பதை ஏற்பதில் உள்ளது…
மகிழ்வு வந்துவிட்டால்
அது குடியிருக்கும்
புன்னகையில்!!!