
“ஒரு விதை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்து கொள்ளுகிறது. அதற்கு நீர் ஊற்றுகிறோம், காத்திருக்கிறோம். அது மெல்ல மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது, கிளைகள் உருவாகின்றன. பூக்கள் பூக்கின்றன. கடைசியில் தான் கனி தருகிறது.
இந்த பயணம் மிக நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் மிக பெரியது. பொறுமையுடன் காத்திருப்பது மிக அவசியம். பொறுமை கசப்பானது ஆனால் அது தருகின்ற கனியோ மிகவும் இனிப்பானது.
-அரிஸ்டாட்டில்”
*****
“விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ
முடியும் என்னும் எண்ணத்தோடு எழுந்திரு
அனைத்தையும் சாதிக்கலாம்.”
*****
“எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும், அது உண்மை.
அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முடியாது.
ஆனால் யாரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்.”
*****
“வாழ்க்கையை கற்றுக்கொள்வதில்
குழந்தையை போல இரு.
அதற்கு அவமானம் தெரியாது.
விழுந்தவுடன் அழும், பின் அழுது முடித்து
மறுபடியும் எழுந்து நடக்கும்.”
*****
“ஞாபகங்கள் அழிக்கபடுவதில்லை.
பிரிந்த பின் தான் ஆழமாக
பதிக்கப்படுகின்றன.”
*****
“புரிந்து கொண்டால் கோபம் கூட
அர்த்தம் உள்ளதாக தோன்றும்
புரியவில்லை என்றால் அன்பு கூட
அர்த்தம் அற்றதாய் தோன்றும்.”
*****