
“கஷ்டங்களை இஷ்டப்பட்டு ஏற்றுக்கொள்.
நீ இஷ்டப்பட்டது கஷ்டமில்லாமல் உன்னை வந்து சேரும் நாளை.”
*****
“உங்கள் உயர்ந்த நோக்கத்தைக் குறைத்து மதிப்பிடுகிறவர்களிடம் சற்று விலகியே இருங்கள். அவர்கள் குறுமதி படைத்தவர்கள், அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.
ஆனால் உயர்ந்த மனிதர்களோ நீங்களும் உயர முடியும் என்ற உணர்வை உங்களுக்கு வழங்குவார்கள்.”
*****
“* எவருடைய மனம் கலங்காமல் இருக்கிறதோ, குழப்பமடையாமல் இருக்கிறதோ, எவர் பாவ, புண்ணியம் பற்றி சிந்திப்பதில்லையோ அவர்களுக்கு அச்சமென்பது அணுவளவும் இருக்காது.
* அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டும். அஞ்ச வேண்டாததற்கு அஞ்சக்கூடாது. இந்த கொள்கையை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்தால் நல்ல பாதையில் திரும்பிவிட்டீர்கள் என்று பொருள்.
* உடலை அடக்கி, நாக்கை அடக்கி, மனதையும் அடக்கி உள்ள அறிவாளிகளே உண்மையான அடக்கம் உடையவர்கள்.
* அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.
* ஆசை என்பது கொடிய நஞ்சு போன்றது. இது எவரைப் பிடித்துக் கொள்கிறதோ, அவருக்கு காட்டுப் புல்லைப்போல கஷ்டங்கள் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.”
*****
“நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே, நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.”
*****
“மற்றவர்களைவிட அதிகமாக தெரிந்துகொள்ளுங்கள்.
மற்றவர்களைவிட அதிகமாக பணியாற்றுங்கள்.
மற்றவர்களைவிட குறைவாக எதிர்பாருங்கள்.”
*****
“தோல்வி அடைவது குற்றமில்லை.
முயற்சி இன்மையே குற்றம்.”
*****
“மன அமைதி வேண்டுமெனில் பிறரிடம் குற்றம் காணாதே.”
*****
“வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ, அதேபோல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஞாபக மறதி மிக அவசியம்.”
*****
“வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை.
தோல்வியை தாங்கும் மனம் இருந்தால், அதுவும் ஒரு வெற்றிதான்.”
*****
“கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது, கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்.
வாழ்வின் எந்தப் பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது, நீங்கள் அனுமதித்தால் தவிர.”
*****