
என் விழிகளில் பார்வை
நீ…
என் இதழ்களில் புன்னகை
நீ…
என் வார்த்தைகளில் கவிதை
நீ…
என் கனவுகளில் நாயகி
நீ…
என் நினைவுகளில் வசந்தம்
நீ…
என் இதயத்தில் துடிப்பு
நீ…
என் வாழ்வில் வந்த வானவில்
நீ…
பார்த்த அன்றே ஆக்கிரமித்து
என் உயிரில் கலந்த காதல்
நீ
கண்ணம்மா!!!