Author Archive
October 18, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 143
ஒரு பறவை உயிருடன் இருக்கும்பொழுதுஎறும்பை சாப்பிடுகிறது பறவை இறந்தபின்பு எறும்புஅதனை சாப்பிடுகிறது இதன் மூலம் அறிந்து கொள்வது நேரமும், சூழ்நிலையும் எந்த நேரமும் மாறலாம். *****
October 18, 2024 by Gowry Mohan
பொழிந்திடு
காத்திருந்து பார்த்திருந்துவறட்சியானதுமண் மட்டுமல்லவிழிகளும் தான்…
October 12, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு5 எ1
குவியல் 5 முகவுரை வையகத்தில் எப்படி வாழவேண்டும் என்று எளிய முறையில் கூறும் நீதி நூல்கள் எல்லோர் மனதிலும் பதியப்படவேண்டியவை. இவை கூறும் கருத்துக்களை படித்து அறிவது மட்டுமன்றி வாழ்வில் கடைப்பிடிக்கவும் பழகினோமேயானால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நீதிநூல்களில் கொன்றைவேந்தனும் ஒன்றாகும்.. நீதியை நிலைநிறுத்தும் கொன்றைவேந்தனில் ஐந்தினை தெரிவுசெய்து இங்கு எனது எண்ணங்களை பதிவுசெய்கிறேன். குவயல் 5 எண்ணம் 1 கிட்டாதாயின் வெட்டென மற மனம் ஒரு […]
October 8, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 142
“ஐந்து வினாடிப் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால், எப்போதும் புன்னகை, வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும். வாழ்க்கையை அழகுடன் வாழுங்கள்.” *****
October 8, 2024 by Gowry Mohan
இயற்கை
அமைதியில் அழகைப் பார்த்து ரசிக்கின்றேன்கோபத்தில் சீற்றம் கண்டு மலைக்கின்றேன்கொட்டிக்கிடக்கும் அதிசயம் நினைத்து வியக்கின்றேன்மறைந்திருக்கும் இரகசியம் தேடி தவிக்கின்றேன்புரியாத புதிராய் இருக்கும் அன்னையே!உன்னைபணிகின்றேன்ஆராதிக்கின்றேன்காதலிக்கின்றேன்!!!
October 2, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு4 எ5
குவியல் 4 எண்ணம் 5 ஆழம் அறியாமல் காலை விடாதே எம்மை சிந்திக்க வைக்கும் முன்னோர்கள் கூறிய பழமொழிகளுள் ஒன்று ‘ஆழம் அறியாமல் காலை விடாதே’. இம் முதுமொழி எமது வாழ்க்கையில் எப்படி பயன் தருகிறது எனப் பார்ப்போம். நீரின் ஆழம் தெரியாமல் காலை வைத்தால் அதில் மூழ்கி தொலைந்துவிடும் வாய்ப்புள்ளது. அதே போலத்தான் நாம் செய்யும் செயலின் ஆழம் தெரியாமல் தொடங்கினால் அதில் சிக்குண்டு தத்தளிக்க நேரலாம்.
September 28, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 141
“மண்வெட்டியை பிடிக்கின்ற உழைப்பளியுடைய கரங்கள் ஆரம்பத்தில் சிவந்து பின் கிழிந்து கடைசியில் பாறை மாதிரி உரமாகும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனதையும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகிவிடும். அப்படி ஒரு மனது அமைந்துவிட்டால் வாழ்க்கையில் எந்த சிகரத்திலும் கூடு கட்டி குடியிருக்கலாம்.” *****
September 28, 2024 by Gowry Mohan
அன்னை
உணவாக உதிரத்தைஉறிஞ்சியதைநினைத்துப் பார்…அக்கணமே அழிந்து போகும்உணவுக்காய் அன்னையைதவிக்கவைக்கும்உன் எண்ணம்…
September 22, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு4 எ4
குவியல் 4 எண்ணம் 4 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது கல்வியுடன் சிறந்த பண்புகளையும் நல்ல பழக்கவழக்கங்களையும் நற்குணங்களையும் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே புகட்டிவிட வேண்டும். அவை பசுமரத்தாணி போல அவர்கள் மனதில் பதிந்து பெரியவர்களானதும் நற்பிரஜைகளாக வாழ வழிவகுக்கும். சிறு பிள்ளைகள் தானே, இன்னும் கொஞ்சம் வளர்ந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று செல்லம் கொடுத்து அலட்சியமாக இருக்கக்கூடாது. பிள்ளைகள் வளர வளர தாங்கள் நினைத்தபடி எல்லாம் செய்யலாம் என்ற எண்ணமும் பிடிவாதமும் சிறிது சிறிதாக தலைதூக்க […]
September 17, 2024 by Gowry Mohan