நிலவே முகம் காட்டு
கார் முகில்கள் மறைத்திருக்கும்
வெண்மதியைப் பாராமல்
போகமாட்டேன்…
கார் முகில்கள் மறைத்திருக்கும்
வெண்மதியைப் பாராமல்
போகமாட்டேன்…
எட்டாத பொருளுக்கு
ஆசைப்படாதே…
இருப்பதையும்
இழந்துவிடுவாய்…
நியாயம் கேட்டோம்
இருந்ததையும் இழந்தோம்…
உறவுகள் உடைமைகள் இருப்பிடம் இழந்தோம்…
நிம்மதி இழந்தோம்…
ஓட ஓட விரட்டப்பட்டோம்
நாடோடி ஆனோம்
நாடு விட்டு நாடு சென்றோம்
மொழி பண்பாடு கலாச்சாரம் ஒத்துவருமா!!!
தலைசுற்றி முழி பிதுங்கி வாழ்கிறோம்…
நிலையான வாழ்க்கை
தாய்நாட்டில் கிடைப்பது எப்போ…!!!
ஒன்றை ஏமாற்றிப் பெற்றால்
பத்தை பறிகொடுப்பது நிச்சயம்…
வண்டினத்தை கவர்ந்திழுத்து
தேன் சிந்தும் மலர்களே!
தென்றலோடு கூடி ஆடி
வாசம் வீசும் மலர்களே!
என் உள்ளத்தின் நாயகனை
கவரும் வழி சொல்வீர்களா…
என் காதலுக்கு
துணையாக வருவீர்களா…
அருள் வடிவானவனே!
அடியவர் குறை தீர்ப்பவனே!
அழகு மயில் வாகனனே!
அலைபாயும் அடியவர் மனதில்
அமைதி தந்து
அருள்புரிய வா முருகா!
பொன்னான நேரம் வீணாக்காது
பொறுப்புடன் எல்லோரும்
பயனுற செலவழிப்போம்…
இழந்துவிட்ட நேரத்தை
மீண்டும் பெற முடியாது…!!!
ஒரு தலையாய் காதலித்தவன்
ஈருயிர் ஓருடல் என்றவன்
மூன்று எழுத்து மந்திரத்தை
நாலே நாளில் புகுத்தியவன்
ஐந்து திங்கள் அன்பை பொழிந்தவன்
நம் பார்வைகள் மோதி
பின்னிப் பிணையும்
தருணங்களை
நேசிக்கிறேன்…
வளரும்போது
பழகும் ஒழுக்கம்
நற்பெயரை
அள்ளித் தரும்…